Tuesday 16 April 2019

எதிரி ரேடாரை ஏமாற்றி தாக்கும் இந்திய நிர்பய் ஏவுகணை.

எதிரி ரேடாரை ஏமாற்றி தாக்கும் இந்திய நிர்பய் ஏவுகணை.
எதிரி ரேடாரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி ஏமாற்றுவதை போல, ரேடாருக்கு சிக்காமல் தாழ்வாக பறந்து சென்று இலக்கை தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை வெற்றியடைந்துள்ளது.
பாரத பிரதமராக திரு நரேந்திர மோடி அவர்கள் வந்த பின்,இந்தியா வான்வெளி பாதுகாப்புக்காக பல்வேறு தொழில்நுட்பகளையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் அத்துமீறும் சீனாவும், பாகிஸ்தானுக்கும் பெரும் அச்சுறுத்தலாகியுள்ளது.
இந்த ஏவுகணை ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும். இந்த நிர்பய் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் வரும் பெங்களூரை சேர்ந்த ஏடிஓ ( (ADE - Aeronautical Development Establishment) ஆய்வகம், நிர்பய் ஏவுகணையை தயாரித்துள்ளது.
நிர்பய் ஏவுகணை நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய வல்லமை பெற்றுள்ளது. மேலும், எல்லா பருவ நிலைகளிலும் பயன்படுத்தவும், பல்வேறு தளங்களில் இருந்து ஏவுவதற்கும் ஏற்றது.
6 மீட்டர் நீளமும், அரை மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏவுகணை இறக்கைகள் 2.7 மீட்டர் அகலம் உடையதாகும்.
ஆயிரத்து 500 கிலோ எடை உள்ள இந்த ஏவுகணை, அணு ஆயுதங்கள் உள்ளிட்ட 24 வகையான ஆயுதங்களையும் சுமந்து செல்லும்.
தரையிலிருந்து 100 மீட்டர் முதல் 4 கிலோ மீட்டர் வரை வெவ்வேறு உயரங்களில் பறந்து செல்லும் திறன் பெற்றது.
எதிரிகளின் ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க மிகவும் தாழ்வாக பறந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இலக்களில் ஒன்றறை தேர்வு செய்து தாக்கும் திறன் பெற்றது.
தாக்க வேண்டிய இலக்கை சுற்றிச் சென்று, அதன் பிறகு ஏவதுன கோணத்தில் இருந்து தாக்குதலை நிகழ்த்தும், இதற்கு ஜிபிஎஸ் வழிகாட்டில் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.
நிர்பய் ஏவுகணை ஓடிசா கடலோரத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கும் இந்தியா விற்பனை செய்து வருகின்றது என்பது குறிப்பிட தக்கது.
இந்திய எல்லையில் அத்துமீறி வரும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சீனா-பாகிஸ்தான் கடலோரங்களில் அத்துமீறி வருவதால், இந்த ஏவுகணை அதற்கு பெரும் முற்றுபுள்ளியை வைத்துள்ளது என்பது தனிச் சிறப்பு. விரைவில் முப்படைகளிலும் இது இணைக்கப்படலாம்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment