Wednesday 21 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சிலர் வாழ்க்கையில் வரும் பிரச்னைக்கு தான் போராடுகிறார்கள். ஆனால் இந்த உலகத்துல நிறைய பேரோட வாழ்க்கையே போராட்டம் தான்.
வயதில் பெரியவர்களுக்கு மரியாதை குடுக்காத இளம் வயதினர் அதிகரித்து வருகிறார்கள். மனிதர்களின் பரிணாம வளர்ச்சி.
நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் நம் பிள்ளைகளுக்கு நேரும் என்பார்கள். நாம் செய்யும் நல்லது புண்ணியமாகும். கெட்டது பாவமாகும். நாம் நல்லது செய்தால் நம் பிள்ளைகளுக்கு தக்க சந்தர்ப்பத்தின் போது உதவி கிடைக்கும். கெட்டது செய்தால் உதவி கிடைக்காது என்பதேயாகும்.
இலட்சியத்திற்கு குறுக்கு வழி என்றுமே ஆபத்து. முறையான அனுபவம் அங்கீகாரத்தால் அடையும் இலட்சியம் நிரந்தரமானது.
 நம் வாழ்வில் சிக்கனமும் சேமிப்பும் இருந்தால் துன்பங்கள் இல்லாமல் வாழலாம்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment