Wednesday 21 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இரண்டாம் உலகப் போரின் போது ஒரு மனிதர் வின்ஸ்டன் சர்ச்சிலை “முட்டாள்” எனக் குறிப்பிட்டதற்காக, அவரைப் பிடித்து சிறையில் அடைத்தார்கள்.
அடுத்த நாள் House of Common அவையில் இன்று தமிழக சட்டசபையில் நடந்தது போன்று ஒரே ரகளை.
“நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா அல்லது சர்வாதிகார நாட்டில் வாழ்கிறோமா? இந்நாட்டின் பிரதமரை ஒரு முட்டாள் என்று வருணிக்க கூட ஒரு குடிமகனுக்கு சுதந்திரம் கிடையாதா?” என்று எதிரணியினர் விளாசித் தள்ளினார்கள்.
சர்ச்சில் அமைதியாக அதற்கு பதிலுரைத்தார்.
“பிரதமரை முட்டாள் என்று அழைத்ததற்காக அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. மாறாக, உலகப்போர் நடக்கும் இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் நம் நாட்டு பிரதமர் பற்றிய பரம ரகசியத்தை வெளியிட்டார் என்பதற்காகத்தான் அவருக்கு இந்த தண்டனை”
வின்ஸ்டன் சர்ச்சிலின் சமயோசித பதிலைக் கேட்டு அவையில் இருந்த அனைவரும் சிரித்து விட்டார்கள்.

No comments:

Post a Comment