Wednesday 28 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உண்மையா சிந்திப்போம்...
இயற்கை வளங்கள் மீது எந்த வித அக்கறையும் இல்லை பிஜேபி அரசுக்கு இல்லை - ஸ்டெர்லைட் ஆலை முதல் அணு உலை வரை இது வெட்ட வெளிச்சமாகத் தெரியவில்லையா? இங்கே சமூக ஆர்வலர்கள் - மிக முக்கியமாக இயற்கை ஆர்வலர்கள் , பாதுகாவலர்கள் நரேந்திர மோடியின் திட்டங்களை தீவிரமாக எதிர்க்க அதற்கு என்றாவது பிஜேபி அரசு செவி சாய்த்தது உண்டா? இதோ இன்னொரு எடுத்துக்காட்டு தான் ஸ்டெர்லைட் தூத்துக்குடி. மக்கள் போராட்டத்தை பற்றி உங்கள் கருத்து என்ன மாரிதாஸ்? (கேள்வி: நந்தினி, ராஜகோபால் இன்னும் சிலர்)
தமிழகத்தில் இயற்கை ஆர்வலர்கள் என்ற பெயரில் சில குரூப் திரிகிறது - அவர்கள் தான் இந்த நாட்டின் இயற்கையைக் காப்பாற்றுவது போலவும் மற்றவர்களுக்கு இயற்கை எக்கேடு கெட்டுப் போனா என்ன என்று நினைப்பதாக ஒரு உருவகம் உணர்வுப் பூர்வமான உருவாக்கிவருகிறார்கள். அரசுக்கு அக்கறையே இல்லை என்பது போல பிம்பம் எல்லாம் மிக கட்சிதமாக பரப்பப்படுகிறது.
முதலில் இதற்கு நான் தெளிவான பதிலை மக்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். கொஞ்சம் பொறுமையாக மனதை அமைதியாக்கிவிட்டுப் படியுங்கள். ஒரு மூன்று விஷயம் தான் , பின்பு இறுதியாக இந்த ஸ்டெர்லைட் விவகாரம் என் பார்வை எப்படி என்பதை விளக்குகிறேன்.
----------------------------------------------------------
01)உலக வெப்பமயமாதல்(Global Warming) :
உலக வெப்பமயமாதல் காரணமாக தான் உலக அளவில் ஒருபக்கம் வரச்சியும் , மற்றொரு பக்கம் பெரும் வெள்ளமும் ஏற்படுகிறது. இதைத் தடுக்க உலக அளவில் நாடுகள் ஒன்றுபட்டுச் செயல்பட தொடங்குகின்றன. அதில் முக்கியமான Union of Concerned Scientists தெரிவிக்கும் கவலை - மூன்று
1.நாடுகள் தங்கள் எரிபொருள் தேவைக்கு நிலக்கரியும் , கச்சா எண்ணெய் இரண்டையும் சார்ந்து இருப்பதை படிப்படியாக குறைக்க வேண்டும். மாற்று எரிபொருளை நோக்கி மக்களை நாடுகள் அழைத்துச் செல்ல வேண்டும்.
2.காடுகள் அழிக்கப்படுவதை முழுமையாகத் தடுக்கவேண்டும். காடுகள் வளர்ப்பில் நாடுகள் கவனம் செலுத்தவேண்டும்.
3.எந்த வகையிலும் co2 கார்பன் வெளியீட்டை தடுக்க வேண்டும்... பெரும் அளவு குறைக்க அக்கறை காட்டவேண்டும் நாடுகள்.
கார்பன் குறைப்புக்கு நரேந்திர மோடி அவர்கள் எந்த அளவுக்குத் தீவிரம் காட்டுகிறார் என்பதன் உண்மையைப் புரிந்து கொள்ளும் முன்- இந்தக் காடுகள் அழிப்பு விவகாரம்.காடுகள் அழிப்பைத் தடுத்து நிறுத்துவதும், காடுகள் வனபரப்பை உறுதி செய்வது அனைத்து நாடுகளின் கடமை. அந்த வகையில் இந்தியா 100% காடுகளை அளித்து வளர்ச்சியை தேடியதே கிடையாது என்பது உலக வங்கியின் அறிக்கையும் கூறும் - இந்தியாவின் காடுகள் பராமரிப்பு புள்ளிவிவரமும் கூறும்.
இந்த விஷயத்தைக் கொஞ்சம் ஆழமாகத் தேடி பார்த்தால் கிடைக்கும் உண்மை என்னவென்றால் - சராசரியாக இந்தியாவின் காடுகள் உள்ள பகுதியின் மொத்த அளவு 639364என்ற அளவில் இருந்த காடுகள் அளவை வாஜ்பாய் அவர்கள் காலத்தில் நல்ல விதமான முன்னேற்றம் கண்டு 2004ல் அவர் விட்டுச் செல்லும் போது காடுகளின் அளவு 6,90,171 என்று பரப்பளவு கூடியது. அதாவது நாட்டின் மொத்தபரப்பளவில் 19.45% இருந்த காடுகள் பகுதி 21% என்று கூடியது. சுமார் 50807சதுர கிலோமீட்டர் அளவிற்குக் காடுகள் பரப்பளவு கூடி நின்றது.
பின்னாளில் பத்துவருட ஆட்சியின் முடிவில் அது 6,92,027என்ற அளவில் இருந்தது. பெரிய வளர்ச்சி இல்லை என்றாலும் கூட காங்கிரஸ் ஆட்சியிலும் காடுகள் அழிக்கப்படவில்லை.
ஆனால் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் இந்தக் காடுகளின் பரப்பளவு கடந்த 4வருடத்தில் Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA) என்று தனித்திட்டம் அமைத்து சுமார் 701673 என்ற அளவில் வளர்ந்து நிற்கிறது. அதாவது 10ஆயிரம் சதுர கிலோ அளவிற்குக் காடுகள் பரப்பளவு கூடியுள்ளது.
இப்போது முக்கியமான ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள் ஒரு காட்டில் ஒரு ஹக்டேர்(Hectare) பரப்பளவு என்பது சுமார் 400மரங்கள் வரை சராசரியாக வளர்க்க முடியும் என்பது ஒரு போது கணக்கு. ஒரு Square Kilometers என்பது 100 Hectare ஆகும்.
அப்படி என்றால் 10ஆயிரம் சதுர கிலோமீட்டருக்கு ஏறக்குறைய 40,00,00,000 வரை நாம் மரங்களை வளர்கிறோம் அதன் மீதும் காடுகள் வளர்ந்திருக்கிறது என்று பொருள். இது தான் அரசு நிர்வாகம் என்பது.
(போராளிகள் சும்மா ஒரு மரம் வெட்டுவதைப் பெரிய பிரச்சனையாக உணர்வுப் பூர்வமாக தூண்டி விடலாம். ஆனால் அரசு அப்படி அல்ல. அதன் செயல்பாடும் நிர்வாகமும் உணர்வுப் பூர்வமானது அல்ல. அது தகவல்கள் அசைக்க முடியாத உண்மை சார்ந்தது. மேலும் தகவல்களுக்கு India State of Forest Report (SFR) 2017 அறிக்கையை எடுத்துப் படிக்கவும்.)
சரி காடுகள் வளர்த்ததில் மட்டும் என்ன சாதனை... வளிமண்டலம் ஓசோன் மண்டலம் பதிப்பு சார்ந்ததில் முக்கிய பங்கு வகிக்கும் எரிபொருள் சார்ந்த உலக விஞ்சானிகள் கவலை பற்றி ????
இந்த இடத்தில் அனைத்து மக்களும் தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள் , உங்கள் வீட்டில் மிம்சாரம் இருக்கே அதில் 75% மிம்சாரத்திற்கு காரணமே நிலக்கரி கொண்ட மின் உற்பத்தி தான். உலக நாடுகள் எல்லாமே இந்தப் புவி வெப்பமயமாதல் தடுக்க முக்கியமான இரண்டு காரியங்களை செய்கிறார்கள்
1.மின் உற்பத்தியில் நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது. 2.பெட்ரோல் டீசல் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது.
UK , பிரான்ஸ் என்று பல நாடுகள் 2025-30குள் நிலக்கரி பயன்படுத்துவதை முழுமையாக இழுத்து மூடவு செய்துள்ளன. அதே போல இந்தியா 2050குள் நிலக்கரி பயன்படுத்தாத நாடாக மாறும் என்று முயற்சியை முன்வைக்கிறது. அதன் படி 2016-17 நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் நிலக்கரி பயன்பாடு 58% அளவுக்குக் குறைத்துள்ளது மோடி அரசு.
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் - அதே நேரம் இந்தியாவில் 99.8% கிராமங்களுக்கு மிம்சாரம் கிடைக்க வழி செய்துள்ளார்கள். அதாவது நாட்டின் அதிக மிம்சார தேவையையும் பூர்த்தி செய்து - அதே நேரம் உலக வெப்பமயமாதலுக்கு தேவையான நிலக்கரி பயன்பாட்டையும் கட்டுக்குள் கொண்டுவதுள்ளார்கள் மோடி தலைமையிலான ஆட்சியாளர்கள். இத்துலாம் எவனாது பாராட்டுவான்????
{இது தவிர மிம்சார திருட்டு , தவறாக புயன்படுத்தபட்ட இலவச மிம்சாரம் , மிம்சார பகிர்மான இழப்புகள் என்று அனைத்தையும் மிகச் சிறந்த வகையில் சரி செய்துள்ளனர் - மனதார பாராட்டத்தான் ஆள் இல்லை இங்கே.} அடுத்து மிக முக்கியமான விஷயம் ....
-------------------------------------------------------------
02)உஜாலா (ujala) :
உங்கள் வீட்டில் உள்ள டீவி மணிக்குக் குறைந்த பட்சம் 160கிராம் co2 வெளியிடுகிறது. அப்படி என்றால் சராசரியாக 5மணிநேரம் உங்கள்; வீட்டில் டீவி ஓடும் என்றால் அது வெளியிடும் ஒரு நாளின் co2 அளவு சுமார் 800கிராம். ஆண்டுக்கு ஏறக்குறைய 2,92,000கிராம்... இந்த அளவு வெளிவரும் கார்பன் வெளியீட்டை சரி செய்யக் குறைத்து 6மரங்கள் வேண்டும்.
இதைப் போல நீங்கள் உங்கள் வீட்டில் பைக் வைத்திருந்தால் - 125CC உள்ள பைக் என்றாலும் நீங்கள் அதை ஊட்ட 5மரங்கள் நட்டுவிட்டு அது வளர்ந்த பின் ஊட்டி கொள்ளலாம். காருக்கு ஒரு 7மரம் தேவை. விட்டில் பிரிட்ஜ் வைத்திருக்கும் அனைவருக்கு அதனால் வெளியாகும் co2கட்டுப்படுத்த 7மரங்கள் வைத்திருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு விசயத்தையும் கணக்கிட்டால் சராசரியாக நாம் ஒவ்வொரு குடும்பமும் 100மரங்கள் கண்டிப்பாக வேண்டும் என்று ஒரு தோராயமாக கணக்கிடலாம்.
ஆக மக்கள் எல்லாம் நல்லவன் இல்லை. அவன் தான் முதல் இயற்கைக்கு எதிரான போக்கு கொண்டவன் என்று புரிகிறது தானே... எதோ அரசு மட்டும் தான் இயற்கைக்கு எதிரான போக்கு உள்ளது போல மாயை உருவாக்கி போராட்டம் நடத்தும் கூட்டம் நோக்கம் இயற்கை ஆர்வலர்கள் பாதுகாப்பு என்பது அல்ல. அரசுக்கும் - மக்களுக்கும் இடையே பகையை உருவாக்கவேண்டும் அவ்வளவு தான்.
என்ன சாரி இப்படி சொல்றேங்க?????
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின் உஜாலா திட்டம் மூலம் LED லைட்டுகள் விநியோகம் ஆரம்பித்து வைத்தது. மானிய விலையில் மிகக் குறைந்த விலையில். அன்று இது என்ன திட்டம் என்று கேலி கிண்டல் எல்லாம் வழக்கமாக வந்ததுவே. ஆனால் இன்றைய தேதியில் (24 MAR 2018) நாடு முழுவதும் சுமார் 29,30,45,393 லைட்டுகள் விநியோகம் செய்துள்ளது அரசு.
இது என்ன சாதனை???
இதன் மூலம் இந்தக் குண்டு பல்பு எரிவதால் உருவான கார்பன் வெளியிடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அளவு 3,08,26,110 டன் co2.
ஒரு டன் கார்பன் என்பது 3.667 டன் கார்பான் டை ஆக்சைடுக்கு சமமானது. ஆக அரசு இந்த முயற்சி மூலம் கட்டுப்படுத்திய கார்பன் அளவு மட்டும் 1005டன் கார்பன். இங்கு நீங்கள் தெரிந்து கொளல்வேண்டிய விஷயம் என்ன வென்றால் ஒரு நன்கு வளர்ந்த மரம் சுமார் 39கிலோ கார்பனை சுத்திகரிக்கத் திறன் கொண்டது. அப்படி என்றால் 25,769 மரங்கள் சேர்ந்து என்ன நாட்டில் கார்பனை கட்டுப்படுத்துமோ அதை இந்த உஜாலா திட்டம் மூலம் செய்துள்ளது மோடி அரசு.
அதாவது எளிமையாகக் கூறினால் 85ஏக்கர் பறந்து விரிந்த ஒரு காட்டி ஆண்டுக்கு எவ்வளவு கார்பனை சுத்திகரித்து காற்றை மாசுபடாது தடுக்குமோ - அதே நடவடிக்கை மக்கள் செய்யும் தவற்றை சரி செய்து கட்டுப்படுத்துவதும் மூலம் செய்து காட்டியுள்ளார் நரேந்திர மோடி அவர்கள். (நரேந்திர மோடி அவர்களின் அமைச்சரவையில் உள்ள பிருஸ் கோயால் வந்த பின் தான் 98% கிராமங்கள் கூட மின்வசதி தடையில்லாமல் பெற்றது. இவர் இந்த 4ஆண்டுகளில் செய்த சாதனை மிக பெரிய லிஸ்ட் உண்டு.. நமது புதிய தலைமுறை கார்த்திகேயன் , செந்திலுக்கு இத்துலாம் பேச வாயில் நாக்கு இல்லை என்பதால் நமக்கு அவ்வளவு தெரியாது.)ஒரு மரம் வெட்டினால் அதன் தேவை காரணம் காரியம் என்று பல விசயங்களைத் தெளிவுபடுத்தி தான் அரசு முறையாகத் திட்டங்களை வகுக்கிறது. ஆனால் இங்கே இருக்கும் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் திரிபவன் பலர் வேலை "உணர்வைத் தூண்டி விடுவது. ஒரு மரம் வெட்டுவதை வீடியோ எடுத்து அதைக் கொண்டு உணர்வைத் தூண்டிவிட முயற்சிப்பது". இயற்கை என்னவோ எவன் வந்து தான் காப்பாற்றுவது போல.
அடுத்து கொஞ்சம் நீர் மாசுபடுதல் விவகாரத்திற்கு வருவோம்...
---------------------------------------------------------------
03)தூய்மை இந்தியா திட்டம் (swach bharat)
தினமும் இந்தியாவில் டயேரியா மூலம் மட்டும் இறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை 500. வருடத்திற்கு ஏறக்குறைய 600,000 குழந்தைகள் இறக்கின்றன காரணம் தூய்மை இல்லாத தண்ணீர் கிராமப்புறங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்று UNICEF அறிக்கை தெரிவிக்கிறது.
இது இன்னொரு விசயத்தையும் வெளிப்படுத்துகிறது - அதாவது இந்தத் தண்ணீர் மாசுபடுவதில் முக்கிய பங்கு கழிப்பறை பயன்படுத்தாமல் இருக்கும் 48% மக்கள் கழிவுகள் தான் முக்கிய காரணம் என்று கூறுகிறது. இறப்பில் 7.5% இறப்புக்குக் காரணமே தண்ணீர் தான் இந்தியாவில் அது தெரியுமா ???? மோசமான தண்ணீர் பயன்பட்டால் நிரந்தரமாக ஊனமாகும் மக்கள் சதவீதம் இந்தியாவில் 9.4%. சுத்தம் இல்லாத தண்ணீர் கிடைக்கும் நாடுகளில் இந்தியா ஏறக்குறையக் கடைசி இடம்.
எனவே இந்தியாவில் தூய்மையின் அவசியத்தை மிகத் தீவிரமாக நடைமுறைக்கு கொண்டவந்தவர் இதே நரேந்திர மோடி அவர்கள் தான். பல இதியாவை டாய்லட் வைத்து கீழ்த்தரமாக கேலிசெய்த போதும் - கழிப்பறை அவசியத்தைப் பிரதமர் எடுத்து வைத்த போது அசிங்கமாக மிமீஸ் போட்ட போதும் கண்டுகொள்ளாமல் அவர் திட்டத்தை வேகபடுத்தினார். பின்னர் அதையும் குறை சொன்னார்கள்.
இன்று???
46,36,158 வீடுகளுக்குக் கழிப்பறை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது... 3,06,064 போது கழிப்பறைகளை கட்டி அதன் மூலம் சுமார் 1,908 நகரங்கள் முழுமையாகக் கழிப்பறை பெற்ற நகரங்களாக உருவாக்கப்பட்டன. (ஆனாலும் நகரங்களில் கழிப்பறை பயன்படுத்தாத மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவனுக்க என்ன சொல்லி திருத்த??) 51,734 வார்ட்களில் உங்கள் வீட்டிற்கே வந்து குப்பைகளை வாங்கிச் செல்ல வசதிகள் செய்து உள்ளது அரசு.
இது அரசின் பக்கம் மோடி நிர்வாகம் எடுத்த முயற்சி... மக்கள் பக்கம் என்ன ஒத்துழைப்பு கொடுத்தீர் என்று நான் தெரிந்து கொளல்லாமா?????? நாடு ரோட்டில் காரி துப்புவது , சந்து மூளையைப் பார்த்தால் நாய் போல ஒன்றுக்கு போவது தானே உங்கள் சுதந்திரம்... இதே மக்கள் சிங்கப்பூர் அமெரிக்க சென்றால் அன்றே சரியாகத்தான் நடந்து கொள்கிறார்கள். ஆனால் சொந்த நாட்டில் இவர்களுக்குக் கிடைக்கும் சுதந்திரம் கொஞ்சம் ஓவர்.
எந்நேரமும் அரசைக் குறை சொல்லும் முன்னர் நாம் மக்கள் செய்யும் குறைகளைச் சரி செய்தோமா????. எனவே மோடி தலைமையிலான அரசு இயற்கை மீது , சுற்று புறச்சூழல் மீது அக்கறை காட்டவில்லை என்று கூறினால் எவனாது நம்புவானா???? நம்புவான் திமுக அதிமுக கொடுக்கும் கலைஞர் டிவிக்கும் , அம்மா பேனுக்கும் வாக்களித்தவன் நம்புவான். அன்று கலைஞர் கொடுத்த டிவியால் உருவான co2 மாநிலத்தின் காற்றை நாசம் செய்தது - இன்று மோடி அவர்கள் கொடுக்கும் LED விளக்குகள் அதை சரி செய்கிறது.
----------------------------------------------------------
ஆக அரசு எந்த அளவிற்கு சுற்றுப்புற சூழல் , வெப்பமயமாதல் விசயங்களில் அக்கறையோடு இருக்கிறது என்று இப்போவாது புரிகிறதா???? மக்கள் எதுவுமே செய்யவில்லை.. உண்மையில் இந்த விசயத்தில் அரசு தான் அதிகம் கவனமாக வேலை செய்கிறது.
இவ்வளவு செய்தும் மோடி கெட்டவர் !!! இந்த போராளி தான் நாட்ட காப்பாற்றுகிறார்கள்???? உங்களை என்னத்த சொல்லி திருத்த..!!
------------------------------------------------------------
இப்போது இந்த ஸ்டெர்லைட் விவகாரம் வருவோம்:
இந்தப் பிரச்சனை விவகாரம் 20ஆண்டுகள் மேல் நடைபெறும் விஷயம்... நீதிமன்றமும் தனது தீர்ப்பை 2013ல் வெளியிட்டது. கொஞ்சம் அதை அனைவரும் படிக்கவேண்டும்.
குழந்தை பிறக்காது. மலட்டுத் தன்மை உருவாகும் , கேன்சர் வரும் என்று மக்களை இயற்கையாகப் பயத்தை தூண்டும் விதமாகப் பிரச்சாரங்கள் நடக்கின்றனவே தவிர அதற்கு ஏதாவது ஆய்வு அறிக்கைகளை நீதிமன்றம் மூலம் சமர்பித்தார்களா என்றால் இல்லை. சும்மா நீதிமன்றம் சென்று எனக்குப் பயமா இருக்கு இதுலாம் வரும் போல என்று சொன்னால் "அப்படியா சரி மூடிவிடலாம் என்று நீதிமன்றம் கூறும் என்று நினைத்துவிட்டீர்?????
காற்று மாசுபடுதாமே??? சரி அதற்காது ஒரு ஆய்வு அறிக்கையை தாங்கள்!!! எனக்குத் தெரிந்து இந்திய மாசுகட்டுபாட்டு வாரியம் கொடுக்கும் தகவலும் சரி - உலக வங்கியின் தகவல் கொண்டு பார்த்தாலும் சரி air quality guideline கொடுக்கும் தகவல்படி பார்த்தால் இந்தியாவில் மிக ஆபத்தான நிலையில் இருப்பது
டெல்லி , பாட்னா , லூதியானா போன்ற நகரங்கள் மிகப் பெரிய காற்று மாசுபாட்டில் உள்ளன..அம்ரித்சர், குவாலியர் கான்பூர் , ஜோதாபூர் , அகமதாபாத் , போபால் , ஹைதராபாத் போன்றவை நிலைமை கவனிக்க வேண்டும் என்கிறது.
அந்த வகையில் தமிழகத்தில் இருந்து சென்னையும் சேலமும் பிடித்திருக்கும் இடம் 327, 481. மொத்த 500நகரங்களில் இவை இரண்டும் அதுவும் முன்நடவடிக்கை தேவை என்பதாக எச்சரிக்கை விடப்பட்ட நகரங்கள் இவை மட்டுமே தமிழகத்தில். தூத்துகூடியின் காற்று மாசுபாடு என்பது எனக்குத் தெரிந்து ஆய்வறிக்கைகள் அப்படி இல்லை. Tamil Nadu Pollution Control அதிகாரிகள் முடிந்தால் அப்படியான உண்மையைத் திரட்டி நீதிமன்றம் செல்லலாமே!!!
எனவே இப்படி எந்த அறிக்கையும் நீதிமன்றம் முன் வைக்காத நிலையில் இந்தியாவில் அதி முக்கியமான காப்பர் தேவையை 36% பூர்த்தி செய்யும் நிறுவனமும் , தூத்துகுடி துறைமுகத்தின் வருவாயில் அந்தப் பகுதி வருவாயில் 10% பங்களிப்பை வழங்கும் ஒரு நிறுவனத்தை எப்படி வெறும் பயமா இருக்கு என்ற காரணத்திற்காக இழுத்து மூட நீதிமன்றம் ஆணையிடும்????? 2013ல் 100கோடி அபராதம் விதித்தது காரணம் காற்று , நீர் மாசுபடுதலில் போதிய அக்கறை இன்மை என்பதால். ஆனால் அதற்கு இன்னொரு காரணம் தமிழ் நாடு அரசு ஊழியர்கள் ஒழுங்கா வேலைபார்க்காததும் தான். இப்படியான ஆலைகள் உள்ள பகுதியை முறையாகத் தீவிர கண்காணிப்பில் வைக்கவேண்டியது அரசு அதிகாரிகள் கடமையும் ஆகும். இனி முறையாக கண்காணிப்பது , பரிசோதனை செய்வதும் அரசு ஊழியர் தம் கடமை. {முழு தீர்ப்பு விவரமும் இன்றும் pdf வடிவில் நீதிமன்ற ஆவணமாக கிடைக்கிறது தேடி படிக்கவும்.}
நீர் , காற்று மாசுபாடுகள் - மக்கள் நலன்பாதிப்பு சார்ந்த ஏதாவது ஆய்வறிக்கைகள் இருந்தா தாராளமாக பசுமை தீர்பபயம் செல்லுங்கள். அது இதற்காகவே உள்ள நீதிமன்றம். அதை விட்டுவிட்டு எதற்கு மக்களிடம் போறேங்க போராட்டம் செய்ய கூறி?
--------------------------------------------------------------
இறுதியாக :
நான் 100% sterlite industries இழுத்து மூடுவதை ஆதரிக்கிறேன் - ஆனால் போராட்டங்களை தூண்டிவிடும் நபர்களிடம் ஆய்வு அறிக்கைகள் இருக்கும் என்றால். இல்லை அனைத்துப் பக்கங்களிலும் இருந்தும் நீதி விசாரணை செய்து ஒரு தீர்ப்பை வழங்கியுள்ள நீதிமன்றத்தின் ஆணைதான் சரி என்று ஏற்பேன்.
தமிழ் நாட்டில் உள்ள இந்த இயற்கை ஆர்வலர்கள் என்ற போராளிகள் பலரது உண்மை முகமே வேற.. "இந்திய நாட்டுக்கு எதிராக மக்களைத் தூண்ட வேண்டும். இந்தியா மீது நம்பிக்கை இழக்கும் வகையில் செய்திகள் போராட்டங்கள் தூண்டவேண்டும்" என்று திரியும் இந்த இயற்கை ஆர்வலர்கள் மீதி எனக்குப் பெரிய மரியாதை எல்லாம் கிடையாது. \
போராட்டங்கள் நடத்தத் தூண்டும் இந்தப் போராளிகள் உண்மையில் மக்களின் பய உணர்வைத் தூண்டி அதன் மூலமே கட்டமைக்கிறார்கள் அனைத்துப் போராட்டங்களையும். மக்களும் கெடுவாய்ப்பாக ஆய்வு அறிக்கைகளை நம்புவதை விட மிமீஸ் , பிட்டு நோட்டிஸ் என்று எவனோ சொல்வதை நம்புகிறார்கள். மிக மோசமாக உச்ச நீதிமன்ற விசாரணையைத் தீர்ப்பை கூட நம்ப மாட்டோம் என்ற அளவுக்கு இருபது நலல் விஷயம் அல்ல. மாணவர்கள் கண்மூடித்தனமாக போராட்டங்களை ஆதரிக்காதீர்.
என்ன இப்படி சொல்லிரெங்க?
எந்த போராளில் இங்கே Co2 கட்டுப்பாட்டுக்கு , தண்ணீர் மாசு அடைவதைத் தடுக்கவோ , மக்கள் சுகாதார வாழ்வுக்கு அரசின் முயற்சிக்கோ என்றாவது உறுதுணையாகக் குரல் கொடுத்தது உண்டா???? யாருமே அரசின் நல்ல முயற்சிகள் எதற்கும் ஆதரவாகக் குரல் கொடுத்து இருக்க மாட்டார்கள். அவர்கள் தகுந்த நேரம் பார்த்து மக்களிடம் நாட்டுக்கு எதிரான கருத்தை விதைப்பதில் தான் இருக்கிறார்கள் என்பது கூடவா தெரியவில்லை உங்களுக்கு!!!
இப்படி எல்லோரையும் சொன்னா எப்டி???
எல்லோரையும் கூறவில்லை. தேசத்தின் குறைகளை களைய உண்மையில் போராடும் பலர் களத்தில் உள்ளனர். அவர்களுக்கு மீடியாக்கள் முக்கியத்துவம் தருவது இல்லை. மீடியா இந்தியாவின் கேடு , அவமானம் அசிங்கம் எல்லாமே. ஒரு பெண் தனது மொத்த சொத்தையும் விற்று தன கிராமத்துப் பெண்களுக்கு கழிவறை கட்டி கொடுக்கிறார் அவர் பிரபலம் ஆகவில்லை , ஒரு ரிட்சா வோட்டும் முதியவர் அகமது தனது 40வருட வாழ்வில் 9 பள்ளிகளைத் திறந்து குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்துலாளர். இப்படி சமூகத்தில் உண்மையாக மக்களுக்கு உழைக்கும் பலரது போராட்டம் எதுவுமே இந்த நாதாரிகள் அளவுக்குப் புகழ் அடைவது இல்லை என்றாலும் அவர்கள் தான் உண்மையான போராளிகள். நாட்டின் தெய்வங்கள்.
ஆக நிச்சயம் மூடலாம் - ஆனால் அசைக்க முடியாத உண்மை ஆய்வு அறிக்கை வேண்டும். இருந்தால் தாராளமாக நீதிமன்றமே மூடும். கட்டாயம் நீங்கள் பயப்படுவதற்காக எல்லாம் மூட வாய்ப்பே இல்லை.
இப்படி நீங்கள் போராட்டம் தொடர்ந்து நடத்துவதால் நிச்சயம் இழப்பு தமிழகத்திற்கு தான் - எந்த நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்க வரபோவது இல்லை. இந்தவிதமான ஆதாரங்கள் இல்லாதா வெறும் சமூக ஊடகங்கள் மூலம் வரும் செய்தி மட்டும் நம்பி உணர்வு பூர்வமாக போராட்டங்களால் நீ இன்னும் அதிகம் நாசமாக போகிறது என்று உறுதியாக கூறுகிறேன். மற்ற மாநிலங்கள் எல்லாம் தொழில் வளர்சியில் வேகம் செல்ல நல்லா இருந்த தமிழகத்தை ஜெயா இறந்த பின் இந்த போராட்டகாரர்கள் நாசம் செய்வதாகவே நான் வேதனை அடைகிறேன்.
போராளி = மக்கள் , ஆட்சியாளர்கள் இருவரின் தவறையும் சுட்டிக்காட்டுவான். நல்ல விசயங்களை ஆதரிப்பான்.
பிரிவினைவாதி = மக்கள் பய உணர்வை, உணர்சிவசப்படும் தன்மையை சாதகமாக பயன்படுத்தி நாட்டுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக மக்களை தூண்டுவான். எந்த நலல்விசயமும் நாட்டில் நடக்கவில்லை என்று பிரச்சாரம் செய்வான்.
போராளி என்பவன் வேறு - போராளிவடிவில் திரியும் பிரிவினைவாதி என்பவன் வேறு. தயவு கூர்ந்து நீதிமன்றம் நம்புங்கள் - மிமீஸ் புரட்சி வசனங்கள் எல்லாம் நம்பாதீர். முக்கியமா திராவிட கட்சிகளை நம்பாதீர்.
Credit - மாரிதாஸ்🙏🏻🙏🏻

No comments:

Post a Comment