Saturday 31 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

⚃⚄⚃⚄⚃⚄⚃⚄⚃⚄⚃⚄⚃⚄
🔮நாம் பிறக்கும் போது...
ஒன்றுமற்ற தன்மையுடன் தான் பிறக்கிறோம்...
பிறகு ஒவ்வொன்றிலும்...
பற்று வைத்து...
பற்று வைத்து...
அதாவது,
பொம்மையில் ஆரம்பித்து...
பொருள்களில் ஆரம்பித்து...
படிப் படியாக...
மனிதனிலிருந்து...
கடவுள் வரை...
அனைத்திலும்...
"என்னுடையது" என்ற பற்றை வளர்த்துக் கொள்கிறோம்...
"தனது உடைமை" ஆக்கிக் கொள்கிறோம்...
🌸வெளியுலகில் உள்ளதை விட....
உள்ளே...
அதை விட அதிகமாகவே...
பற்றை சேர்த்து வைத்து கொள்கிறோம்...
🔮ஏழ்மையில் இருப்பவனும் சரி...
பணத்தில் திளைத்திருப்பவனும் சரி...
பணிவுடன் இருப்பவனும் சரி...
🔮ஒவ்வொரு மனிதனும்...
அவனுடைய "நான்" என்ற தன்மையில்
உச்சத்திலேயே இருக்கிறான்...
🔮வருடக் கணக்கில்...
சேர்த்து வைத்த...
உறைந்த பனிக் கட்டி போல் ஆகி விட்ட இந்த அகங்காரத்தை எப்படி கரைப்பது...???
🌸ஓஷோ கூறுகிறார்...
"சாது ஒருவர் எழுதியிருக்கிறார்...
பற்றின்மை என்பது...
காமம், கோபம், குரோதம், பந்தம் என எல்லாவற்றையும் விட்டு விடுவது என்று எழுதியிருக்கிறார்...
ஏதோ, மனிதன் இவற்றையல்லாம் பிடித்து வைத்திருப்பதை போல...
அவர் விட்டு விடு என்கிறார்...
🌸உண்மையில் அவைகள் தான்...
இவனைப் பிடித்து வைத்துள்ளன...
🌸ஒரு சிறுவனிடம் நான் கேட்டேன்...
"உன் நோயை விட்டு விட வேண்டியது தானே என்றேன்...
நான் எங்கே பிடித்து வைத்துள்ளேன்...
விட்டு விடுவதற்கு என்றான்."
🔮இயல்பாகயிரு...
சாட்சியாயிரு...
போதுமானது...
என்பது சரி தான்...
இப்போது உள்ள நிலையில் எப்படி?
🌸இவையிரண்டும் முயற்சியால்...
பயிற்சியால்...
வருவதில்லை...
ஆனால்,
இவை உங்களுக்குள்...
"தானாக நிகழ"...
முயற்சியும்...
பயிற்சியும்...
அவசியம்...
😌தியானம்.
🔮ஞானியர்களின்
போதனைகளை...
உள்வாங்கி கொண்டு...
நம் புரிதலில் கொண்டு வந்தவுடனே...
தெளிவு பிறக்க ஆரம்பித்து விடுகிறது...
கற்றுக் கொள்கிறோம்...
செய ல்படுத்துகிறோம்...
அகங்காரம் கரைய ஆரம்பிக்கிறது....
🔮ஞானியர்களின்... வழிகாட்டுதல்களில்...
தியானப் பயிற்சிகளில்...
அகங்காரம் உடைய...
ஆரம்பிக்கிறது...
வலி இருக்கத் தான் செய்யும்...
நாம் சேர்த்து வைத்ததை...
நாமே இறக்கி வைக்கிறோம்...
நம் நிலைக்கு நாமே பொறுப்பு...
என்று புரிந்து கொண்டால் போதும்...
ஏற்புத் தன்மை தானே வருகிறது....
🌸"இயல்பாக இருப்பீர்கள்..."
எந்த முயற்சியும் இல்லாமல்...
🌸"சாட்சியாயிருப்பீர்கள்..."
🌸உயர்ந்த விஷயங்கள் எதையும்...
நீங்கள் நேரடியாகவோ...
தீவிரத் தன்மையாலோ...
பெற முடியாது.
🌸"அது எப்போதும்
மென்மையாக...
மறை முகமாகவே...
உங்களை தழுவுகிறது..."
காத்திருங்கள்.
⚅⚃⚅⚃⚅⚃⚃⚅⚃⚅⚃⚅⚃⚅

No comments:

Post a Comment