Thursday 29 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒவ்வொரு உறவும் சிறப்பாக வளர நல்ல புரிதல் அவசியம். வாழ்க்கைத் துணையின் செயல்கள் ஒவ்வொன்றினையும் குற்றமாகப் பார்க்கும் போது, அங்கே புரிதலின்மை ஆரம்பமாகிறது. இதன் விளைவாக தவறாகப் புரிந்து கொள்ளுதல் உருவாகிறது. அது உறவில் விரிசலை உண்டாக்குகிறது.
குறைகளை சுட்டிக் காட்டுங்கள் குறைகளின் சொந்தக் காரனுக்கு. மற்றவர்களிடம் சொல்லாமல்.
உங்களுக்கான உண்மையான மரியாதையும் முக்கியத்துவமும், உங்களின் பண, சமூக அடையாளங்கள் தெரியாத இடங்களில் மட்டுமே கிடைக்கப் பெறுவீர்கள்.
மன நிம்மதி வேண்டும் என்பதற்காக தான் எல்லா சமரசங்களையும் செய்வது, தீயதை கண்டு கொள்ளாமல் இருப்பது, சுயமரியாதை பற்றி கவலை இல்லாமல் இருப்பது, என்பதை உணருங்கள்.
வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மனிதர்களும் ஏதேனும் ஒரு பாடத்தை கற்பித்து விட்டே செல்கிறார்கள். எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சிலரும். எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணமாய் பலரும்.
நல்லதே நடக்கும்
எல்லாம் நன்மைக்கே

No comments:

Post a Comment