Tuesday 20 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தமிழுக்கும் அமுதென்று பேர்!!!
கி.வா.ஜ விடம்,"தமிழ் மொழிக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது?" என்று பெரியவர் கேட்டார்.
இந்தக் கேள்வியை கி.வா.ஜ. எதிர்பார்க்கவில்லை
என்ன பதில் கூறுவது என்றும் தெரியவில்லை.
'தமிழின் சிறப்பைச் சொல் என்றால் ஒரு மணி நேரம் கூட பேசலாம். அவ்வளவு செய்திகள் உள்ளன. தமிழுக்கு தமிழ் என்று ஏன் பெயர் வந்தது என்றால் அதை என்னவென்று சொல்வது?'
உண்மையில் கி.வா.ஜவுக்கு விடை தெரியவில்லை. அதற்கு உள்ளபடியே ஒரு விடை இருப்பதாகவும் தெரியவில்லை.
"எனக்கு தெரியவில்லை.நீங்களே சொல்லிவிடுங்கள்" என்றார் மிகுந்த தன்னடகத்தோடு.
பெரியவரும் கூறத்தொடங்கினார்.
"நான் சொல்லப் போற பதில் என்னுடைய கருத்துதானே ஒழிய இதை தமிழ்ப் புலவர்களோ,அறிஞர்களோ யாரும்
சொல்லலை.என் கருத்தை எல்லாரும் ஏத்துக்கணும்கிற கட்டாயமும் கிடையாது.எனக்கு தோன்றியதைச் சொல்கிறேன்"
என்கிற பீடிகையோடு பெரியவர் சொல்லத் தொடங்கினார்.
"தமிழின் சிறப்பே 'ழ' கரம்தானே! வேறு எந்த பாஷையிலும் இது கிடையாது. 'ழ'கரம் வரும் சொற்கள் எல்லாமே பெரும்பாலும் இனியது. நல்ல பொருள் உடையது.
'மழலை,குழவி,வாழை,யாழ்,பொழிவு,வியாழன்,
சூழல்,ஆழி, மேழி, ஊழி...' இப்படி ழ,ழி, வரும் சொற்களை வரிசையாக சொல்லிக் கொண்டே வந்த பெரியவா் ,"தம்மிடம் இப்படி
இனிய தன்மை கொண்ட 'ழ'வை உடையது என்பதால் தமிழ் என்று வந்துவிட்டதோ" என்று கேட்கவும் கி.வா.ஜ.விடம் பிரமிப்பு.
எவ்வளவு ஆழமான பார்வை.கருத்திலும் அசைக்க முடியாத வலிமையல்லவா? கி.வா.ஜ. அந்த கருத்தை ஏற்றுக் கொண்டதோடு, இனி நான் பேசும் தமிழ்க் கூட்டங்களில்இதை எடுத்துச் சொல்வேன் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment