Thursday 22 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வன்கொடுமைச் சட்டம்
---------------------------------------
எல்லோரும் தமிழக அரசியலில் பரபரப்பாக இருக்க, சப்தமேயில்லாமல் உச்ச நீதிமன்றம் அதிமுக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
#வழக்கு எண் Criminal appeal 416/2018 தீர்ப்பு நாள் 20.03.2018
தாழ்த்தப்பட்டோர்களுக்கெதிராகச் செயல்படுவோர் மீது Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act 1989 ...என்ற சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் சில நெறிமுறைகளை வகுத்திருக்கிறது.
இதன்படி, இச்சட்டப் பிரிவுகளின்கீழ் எவரையும் உடனடியாகக் கைது செய்துவிடமுடியாது.
குற்றம் சாட்டப்படுபவர் அரசு ஊழியர் என்றால், அவரது நியமன அதிகாரியின் எழுத்துபூர்வ அனுமதி இருந்தால் மட்டுமே அவர்களைக் கைது செய்ய முடியும்.
குற்றம் சாட்டப்படுபவர் பொதுமக்கள் என்றால், அந்த மாவட்டத்தின் மிக மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் (Senior SP) எழுத்து பூர்வ அனுமதிக் கடிதம் பெற்றால் மட்டுமே கைது செய்ய முடியும்.
மேலும் இப்பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவோருக்கு முன் ஜாமீன் வழங்க எவ்விதத் தடையும் இல்லை எனவும் கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது உச்ச நீதி மன்றம்.
இந்த உத்தரவை மீறுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் இது போன்று பதியப்பட்ட பல்வேறு புகார்கள் ஜோடிக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டதால் உச்ச நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்திருக்கிறது
The Bench has issued the following directions;
1.There is no absolute bar against grant of anticipatory bail in cases under the Atrocities Act if no prima facie case is made out or where on judicial scrutiny the complaint is found to be prima facie malafide ...
2.In view of acknowledged abuse of law of arrest in cases under the Atrocities Act, arrest of a public servant can only be after approval of the appointing authority and of a non-public servant after approval by the S.S.P. which may be granted in appropriate cases if consideted necessary for reasons recorded. Such reasons should be scrutnized by the magistrate for permitting further detention.
3.To avoid false implication of an innocent, a preliminary enquiry may be conducted by the DSP concerned to find out whether the allegations make out a case under the Atrocities Act and that the allegations are not frivolous or motivated.
4.Any violation.of direction (2) and (3) will be actionable by way of disciplinary action as well as contempt...
Thus kind of good judgments is needed at this point in time. A relief
நன்றி வழக்கறிஞர் கே. எம். முருகப்பன்

No comments:

Post a Comment