Friday 5 January 2024

உண்மைத் தன்மை .

 உண்மைத் தன்மை . .

மாஸ்டர்
தன் ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தார்.
அருகில் வர்ணங்களைக் கையில்
வைத்திருந்த சீடன்.
அந்த ஓவியத்தை விமர்சனம்
செய்து கொண்டே இருந்தான்.
இது இப்படி இல்லை குருவே.
இது அப்படி வர வேண்டும்.
இது சரியில்லை.
இதை வேறு மாதிரி செய்யுங்கள்.
என்று கூறிக் கொண்டே இருந்தான்.
ஒவ்வொரு முறை வரைந்து முடித்த பிறகு இறுதியில் அந்த சீடனிடம் அழகாக இருக்கிறதா
என்று கேட்பார் குரு.
இல்லை குருவே,
முழுமை பெறவில்லை என்பான்.
இப்படிப் பலமுறை மாற்றி அமைத்தும் ஓவியம் நிறைவு பெறவில்லை.
குரு சீடனிடம்,
நீ சென்று மேலும் வர்ணங்களைக் கொண்டு வா என்றார்.
மேலும் வர்ணங்களை
எடுத்து வந்த சீடன்,
ஓவியம் அழகாக நிறைவடைந்திருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தான்.
குருவே எப்படி இது நிகழ்ந்தது
என்று கேட்டான்.
உன் விமர்சனம் தான்
இந்த ஓவியத்தை நிறைவடையச் செய்யாமல் தடுத்தது.
நீ சென்றவுடன்,
என் *உள் உணர்வின்படி* அதை வரைந்தேன்
முற்றுப் பெற்றது என்றார்.
பிறரின் கருத்துகளுக்கு ஏற்ப
உன் வாழ்க்கையை
மாற்றிக் கொண்டே இருந்தால்
உன் வாழ்க்கை கிறுக்கல்கள் ஆகிவிடும்.
*அனைத்தையும்
கேட்டுக் கொள்.
கவனி ஆனால் பின்பற்றாதே.*
*"உன் வாழ்க்கை ஓவியத்தை
நீயே அழகாக
வரைந்து கொண்டே வா."*
உன் உள் தன்மையில்.
உன் உண்மைத் தன்மையில்.

No comments:

Post a Comment