Tuesday 2 January 2024

எளியவர்களிடம் தாராளமாக இருக்கலாம்.

 எளியவர்களிடம் தாராளமாக இருக்கலாம்.

ஒரு பெண்மணி
ஒரு முட்டை விற்கும் முதியவரிடம், "நீங்கள் விற்கும் முட்டைகளின் விலை என்ன " என்று கேட்டாள்.
அந்த முதிய விற்பனையாளர்,
"ஒரு முட்டை விலை ரூ 5 மேடம்"
என்றார்.
அவள் அவரிடம், “எனக்கு 6 முட்டைகளை ரூ 25 க்கு தர வேண்டும்,
இல்லை என்றால் வேண்டாம், நான் போகிறேன்” என்றாள்.
முதியவர் , “நீங்கள் கேட்டபடியே எடுத்து கொள்ளுங்கள்,
இன்று காலையிலிருந்து
இதுவரை ஒரு முட்டையை கூட விற்க முடியவில்லை, இதை வைத்துத் தான் என் பிழைப்பு நடந்து வருகிறது" என்றார்.
அவள் முட்டைகளை
வாங்கிக் கொண்டு வெற்றி பெற்ற உணர்வோடு கிளம்பிச் சென்றாள்.
பிறகு, அவள் காரில் ஏறி தன் தோழியுடன் ஒரு ஆடம்பரமான உணவகத்திற்குச் சென்றாள்.
அவளும் அவளுடைய தோழியும் தங்களுக்கு பிடித்த பிரியாணி முதல் பல ஐட்டங்கள் ஆர்டர் செய்தார்கள். கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, நிறைய வீணாக்கினார்கள். பில் வந்தது ரூ 950/- . அந்தப் பெண் இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை கொடுத்து விட்டு, மிச்ச பணத்தை டிப் ஆக வைத்துக் கொள்ளும்படி சொன்னாள்.
இது அந்த ஆடம்பர
உணவகத்தினருக்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் முதலில் சொன்ன முட்டை விற்பனையாளர் பார்வையில் மிகவும் நியாயமற்றது.
கேள்வி என்னவென்றால்:
"சாமானிய மனிதர்கள் விற்கும் பொருட்களை வாங்கும் போது நாம் அவர்களிடம் நமது பேரம் பேசும் சக்தியைக் காட்ட வேண்டுமா "
"நமது தாராள மனப்பான்மை தேவைப்படாதவர்களிடம் நாம் ஏன் அந்த அளவுக்கு தாராளமாக இருக்கிறோம்"
முன்பு எப்போதோ படித்ததை இந்த சமயத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:
ஏழை மக்களிடம்
பொருட்களை வாங்கும் போது, எனது தந்தை அவர்கள் கேட்கும் விலையை பேரம் பேசவே மாட்டார்.
அதிக விலை என்றாலும் மனம் உவந்து கொடுப்பார்.
சில நேரங்களில் அவர்கள்
கேட்பதைவிட அதிகமாகவே கொடுப்பார். நான் திகைத்து போய் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்கும் போது.
இது "கண்ணியத்தால் மூடப்பட்ட ஒரு தானதர்மம்" தான் மகனே என்று சொல்வார்.
தகுதியானவர்களிடம்
தாராளமாக இருப்பதும்,
தேவைப்படும் எளியவர்களிடம் பேரம் பேசுவதை நிறுத்துவதும்,
உங்களுக்கு ஆத்மதிருப்தியை கண்டிப்பாகக் கொடுக்கும்.

No comments:

Post a Comment