Monday 8 January 2024

அவமானம் எனும் அமிர்தம் .

 அவமானம் எனும் அமிர்தம் .

ஒரு ரயில் போய்க்கிட்டிருக்கு
அதிலே ஒரு சாது போய்க்கிட்டிருக்கார். அந்த ரயில்லே ஹரித்துவாரம் போய்க்கிட்டிருக்கார் அவர்.
ரயில்லே ஏகப்பட்ட கூட்டம்.
நம்ம ஊர் ரயில் கேட்கவா வேணும் டிக்கட் வாங்கிக்கிட்டு பாதிப்பேர்
'அது என்னத்துக்கு அனாவசியமா டிக்கெட் -ங்கற நினைப்பிலே பாதிப்பேர் இந்த கூட்டத்துக்கு மத்தியிலே அந்த சாதுவும் போய்க்கிட்டிருக்கார்.
உட்கார்றதுக்காக இருந்த இடத்திலே ஒரு ஆள் படுத்திருந்தான்.
கொஞ்சம் முரட்டு ஆசாமி.
அவன் கால் பக்கத்திலே
கொஞ்சம் இடம் பாக்கி இருந்தது.
அந்த இடத்திலே இந்த சாது உட்கார்ந்தார்.
ஆனா அந்த ஆள்
ராத்திரி முழுவதும் இவரைக் காலாலே உதைச்சிக்கிட்டே இருந்தான்.
அது இவருக்கு
ரொம்ப அவமானமா பட்டுது.
இருந்தாலும் அதை ஒரு மாதிரியா சகிச்சிக்கிட்டே இவர் வந்து சேர்ந்தார்.
பொழுது விடிஞ்சிது.
அந்த சாது
ஹரித்துவார் வந்து சேர்ந்தார்.
அங்கே ஒரு பெரிய ஞானியை அவர் சந்திச்சார்.
இராத்திரி ரயில்லே அந்த ஆள் உதைச்சதையும் - அதனாலே தனக்கு ஏற்பட்ட துக்கத்தையும் இந்த சாது அந்த ஞானிகிட்டே சொன்னார். சொல்லிட்டு "ஏன் சுவாமி
எனக்குத் துக்கம் ஏற்பட்டதே, அது தவறா'-ன்னு கேட்டார்.
"தவறுதான்...."-ன்னார் அந்த ஞானி.
"உனக்கு இன்னமும் தேக அபிமானம் போகலைங்கறதைத் தான் இது காட்டுது. அஷ்டாவக்கிரர் என்ன சொல்றார் தெரியுமா.
உண்மையான ஞானி,
யாராவது தன்னை வந்தனை செய்தால் அதற்காக சந்தோஷப்பட மாட்டார். யாராவது நிந்தனை செய்தால் அதற்காக வருத்தப்படமாட்டார் - அப்படின்னு சொல்றார்.
நிந்தனை -ங்கறது ஒரு ஒலிதான். தேகாபிமானம் இருக்கிற வரைக்கும் இந்த ஒலி நம்மை வேதனைப்படுத்தும். நான் தேகம் இல்லை, ஆத்மா ங்கற நினைவு இருந்தா இந்த ஒலி நம்மைப் பாதிக்காது. மனு என்ன சொல்றார் தெரியுமா.
ஒரு சாதகன் பாராட்டுதலை
விஷம் - ன்னு நினைத்துப் பயப்பட வேண்டும்; அவமானத்தை அமிர்தம்ன்னு நினைச்சி சந்தோஷப்படணும் -ங்கறார்.
அவமானப்பட்டா, கவலைப்படாமே எப்படி இருக்க முடியும் - ன்னுதான் நமக்குத் தோணுது.
அதனாலே தான்
நம்மள்லே யாரையும் இதுக்கு உதாரணம் காட்ட முடியலே.
புத்தரையும் கபீரையும் உதாரணமா காட்டறாங்க. அவங்களுக்கெல்லாம் அவமானம் ஏற்பட்டப்போ கவலையே படலையாம்.
புத்தரை அவமானப் படுத்தணும்ங்கறதுக்காக, கௌசாம்பி ராணி, ஓர் இளம் பெண்ணை கொலை பண்ணி சடலத்தை புத்தர் குடிசைக்கு முன்னாலே போடச் சொன்னார். போட்டாங்க.
புத்தர்தான் அந்த பெண்ணைக் கெடுத்துக் கொலை பண்ணிட்டார்ன்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா புத்தர் இதைப்பத்தி கவலையே படலே. அப்புறமா உண்மை தெரிஞ்சதும் புத்தர் புகழ் இன்னமும் அதிகமாச்சு.
ஒரு பெரிய சபையிலே ஒரு மோசமான பொண்ணு நுழைஞ்சு தனக்கும் கபீருக்கும் சம்பந்தம் உண்டுன்னு சொன்னாள்.
கபீர் கவலைப்படலை அவங்க மாதிரியெல்லாம் நாமளும் இருக்கக் கத்துக்கணும். நிந்தனை - அபகீர்த்தி - அவமானம் எல்லாம் ஆண்டவன் கொடுக்கிற பிரசாதம்ன்னு நினைக்கணும்"-ன்னு
சொல்றார் அந்த ஞானி.

No comments:

Post a Comment