Monday 8 January 2024

குருவருளும் திருவருளும்

 குருவருளும் திருவருளும் . .

பொதுவாக,
ஞானிகள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அவர்கள் பேரின்பத்தில் திளைத்திருப்பார்கள்.
அவர்கள் எத்தகையதொரு வறுமையான சூழ்நிலையில் இருந்தாலும்,
மகிழ்வாக இருப்பார்கள்.
அதனால் தான், கடுமையான வறுமையில் வாடியபோதும்,
பாரதியார்
பின்வரும் பாடலைப் பாடினார்.
*எத்தனை கோடி
இன்பம் வைத்தாய்*
*எங்கள்
இறைவா இறைவா இறைவா*
எனவே, உலகம் என்பது இன்பமயமானது தான்.
எங்கும் இறைவனே. எங்கும் அன்பும் கருணையுமே நிறைந்துள்ளன.
எவ்வாறு நதியானது,
தன்னுடைய மூலமான கடலை நோக்கிச் செல்ல விழைகிறதோ,
அவ்வாறே தன்னுடைய மூலமான இறைவனை நோக்கிச் செல்ல விழைகிறான்.
அந்தத் தேடல் மனிதனுக்கு
என்றும் உண்டு.
அந்தத் தேடல் நிறைவேறும் வரை, மனிதனின் மனமானது எது கிடைத்தாலும், முழு அமைதியடையாது.
ஏனென்றால்,
ஒரு குழந்தை தாயினைக் காண விழைகிறது. தாய் வரும் வரை, குழந்தையைச் சமாதானப்படுத்த எவ்வளவோ பொம்மைகளை அருகிலுள்ளவர்கள் வழங்குகின்றனர். அதில் விளையாடியபோதும்,
குழந்தை தாயின் வரவை வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறது.
தாய் வந்தப்பின்னரே,
குழந்தை அமைதியடைகிறது.
எனவே,
பேரின்பத்தை அடையும் வரை, மனிதனின் மனம் முழு அமைதியடையாது.
பேரின்பத்தை , இறையை உணர்ந்த ஞானிகள் மட்டுமே முழு அமைதியடைந்த மனத்தை உடையவர்கள்.
வேண்டாமை என்ற நிலை அடைந்தவர்கள்.
குருவின்
பாதச்சுவடுகளைப் பின்பற்றி,
குருவழி வாழ்ந்தால்,
குரு அடைந்த திருவை
நம்மாலும் அடைய முடியும்.
*இறைவனை
அடைய குருவருளும்,
திருவருளும்
துணை புரியட்டும்.*

No comments:

Post a Comment