Thursday 11 January 2024

மனத் தெளிவு குழப்பம் இன்மை .

 மனத் தெளிவு குழப்பம் இன்மை .

ஒரு அரசிக்குப் பக்கத்து நாட்டு அரசனின் மகனைத் திருமணம் செய்ய அரசியின் தகப்பனார் ஆசைப்பட்டார்.
தன் விருப்பத்தை அரசியிடம் சொன்னார். அரசியோ மிகச் சிறந்த அழகி.அறிவுப் பெட்டகம்.
அவள் அவரின் தந்தையிடம் எனக்கு மணமகனாக வருபவர் என்னை விட அறிவில் சிறந்தவராக இருக்க வேண்டும் என்றும், அதனால் அரசகுமரனின் அறிவை நான் சோதிக்க வேண்டும் என்று அவள் தன் தந்தையிடம் கூறினாள்.
அரசன் அப்படியே செய்
என்று அவரும் அவளுக்கு அனுமதி கொடுத்தார்.
அரசகுமாரி அந்த அரசகுமரனுக்கு இரண்டு ரோஜாப்பூக்களை அனுப்பி வைத்தாள்.
அந்த ரோஜாப் பூக்கள் ஒன்று போல் மற்றதும் இருந்தது.
ஒன்று உண்மையான ரோஜாப்பூ.
மற்றது
செயற்கையான ரோஜாப்பூ.
ஆனால் உண்மை எது
செயற்கை எது
என்று இனம் காண முடியாதபடி அவை இருந்தது.
இளவரசன் எப்படிக் கண்டறிவார் என்பதை அவள் அறிய விரும்பினாள்.
பூக்கள் இளவரசனிடம் சேர்க்கப்பட்டன. இளவரசன் இரண்டு பூக்களையும் உற்று நோக்கினான்.
இளவரசன் தன் பணியாளை அழைத்து ஜன்னல் கதவுகளை திறக்குமாறு உத்தரவு இட்டான்.
உண்மையான ரோஜாப்பூவை நோக்கி தேனீக்கள் சென்று அமர்ந்தன.
அது உண்மையான ரோஜாப்பூ என்பதும் வெளிப்பட்டது.
மனத் தெளிவும்,
அமைதியான உள்ளமும்
அழகின் முதல்படியாகும்.
திருப்தியான உள்ளம் அமைதியை ஏற்படுத்தும்.
எனவே
மன அமைதியைத்
தேட முயற்சி செய்யுங்கள்.
உங்களைப் பற்றி அழகான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். நல்ல மென் உணர்வுகளைக் கொண்டிருங்கள்.
அதுவே உங்கள் முகத்திலும் உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
மனத் தெளிவோடு, குழப்பமின்றி செயல்படுபவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.

No comments:

Post a Comment