Thursday 11 January 2024

ஓய்வு எடு உட்காரு படுத்துக்கொள் .

 ஓய்வு எடு உட்காரு படுத்துக்கொள் .

மருத்துவர்கள்
வயதாக வயதாக தங்களிடம் வரும் நோயாளிகளை அதிக சோதனைகளுக்கு அவசியமில்லாமல்.,
நோயின் தன்மை, தீவிரம் போன்றவற்றைத் தங்கள் நீண்ட கால அனுபவத்தால்
கணித்து விடுகிறார்கள்.
நோயாளியிடம் பரிவும் கனிவும் அதிகமாகிறது.
ஆசிரியர்களும், பேராசிரியர்களும் வயது அதிகமானால் கண்டிப்பைக் குறைத்துக் கொண்டு, மாணவர்களின் குறும்பை ரசிக்கும் பக்குவத்தை அதிகம் பெற்று விடுகிறார்கள்.
மேலதிகாரிகளில் பலர், மிடுக்கையும் அதிகாரத் தோரணையையும் குறைத்துக் கொண்டு, சகாக்களின் சிறிய தவறுகளை மன்னித்து, தக்க ஆலோசனைகளைக் கூறத் தொடங்குகிறார்கள்.
பழைய விரோதங்கள் மறக்கப்படுகின்றன,
பழைய குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன.
வாழ்க்கைப் பயணம் நீள நீள ஆங்காங்கே சுமைகள் கழிக்கப்பட்டுப் பயணிப்பது எளிதாகிறது.
வயதாக வயதாகப் பல செயல்கள் மறந்துப் போவது பெரிய பிரச்சினையாகத் தெரிவதில்லை.
வயதாகி விடுகிற போது எது, எப்படி, எந்த வகையில் நடக்கும் என்கிற புரிந்துணர்வு ஏற்படுகிறது.
சின்ன வயதில் நாமும் அப்படித் தானே இருந்தோம் என்னும் நினைவு இளையவர்களிடம் பரிவு காட்ட வைக்கிறது.
எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது. அவசரம் குறைந்து நிதானம் கூடுகிறது.
தமது எதிர்காலத்தைப் பற்றி முதியவர்கள் சிந்தனை கூடச் செய்வதில்லை. அவர்களுக்குத் தற்காலம் தான் நிதர்சனம்.
உடம்பு முடியவில்லையா,
ஓய்வு எடு..,
நடக்க முடியவில்லையா,
உட்காரு.
உட்காரக் கூட முடியவில்லையா, படுத்துக் கொள்.
இதுதான் அவர்களுடைய கொள்கை.
"யார் ஒருவர்
எடுத்த முயற்சியில் உடனே வெற்றி பெற்றால் அவன் அறிவாளி.
அதில் பல தோல்விகளைக் கண்டு அதன்பின் வெற்றி பெறுபவன்
நல்ல அனுபவசாலி.
உங்கள் வாழ்வில் நீங்கள் கற்ற பாடத்தை விட அனுபவமே நல்ல பாடத்தைக் கற்றுத் தரும்.
அனுபவங்கள் தான் ஒருவரை அறிவாளி ஆக்குகின்றன.
அறிவுள்ளவர்கள்
அனுபவங்களை அன்புடன்
ஏற்றுக் கொள்கின்றனர்.

No comments:

Post a Comment