Thursday 25 January 2024

பயமின்றிப் பயணம் . .

 பயமின்றிப் பயணம் . .

_உங்களது திட்டம் எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறதோ, அதைப் பொறுத்தே உங்கள் சாதனையும் இருக்கும்._
_எப்போது முடிவு எடுக்கிறீர்களோ அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தை கடந்து விட்டீர்கள் என்பது உறுதி._
_ஒரு சிலரின் நிராகரிப்புக்களே உங்களைத் தகுதியான இடத்திற்கு அழைத்து செல்கிறது. பயமின்றிப் பயணம் செய்யுங்கள்._
_கடந்து வந்த படிகளை உடைக்காதீர்கள். ஒருவேளை இறங்குவதற்கு அதே படிகள் தேவைப்படலாம். விதி வலியது. காலம் கொடியது._
_*தோல்வி ஓட ஓட துரத்தினாலும், நீ ஓட்டத்தை நிறுத்தி விடாதே.*_
_*இடையே வரும் தோல்வியும் தடையும், வெற்றியின் ஆரம்பப் படிநிலைகள்!*_
_*வாழ்க்கையில் தடைகள் வந்தால் தோல்வி உறுதி அல்ல, தடைகளைக் கண்டு பின் வாங்கினால் தோல்வி உறுதி!*_
_*பிறரை நம்புங்கள் உயர்வதற்கு*_ _*வாய்ப்புகளை நம்புங்கள் முயல்வதற்கு,*_
_*சவால்களை நம்புங்கள் வளர்வதற்கு,*_
_*உங்களை நம்புங்கள் வாழ்வதற்கு....*_
All reactions:
Krishna Raman and 2 others

No comments:

Post a Comment