Friday 5 January 2024

கசப்பதும் இனிப்பதும் .

 கசப்பதும் இனிப்பதும் . .

*கவனிக்கப்பட வேண்டும்*
*என்றால் குப்பையில்*
*கூடப் புரளலாம்.*
*ஆனால்*
*கௌரவிக்கப்பட வேண்டும்*
*என்றால் இடம் பார்த்துத் தான்*
*அமர வேண்டும்.*
*அறிவுரை என்றால் கசக்கிறது*
*அளக்கும் கதை என்றால் இனிக்கிறது*
*இன்றைய தலைமுறைக்கு.*
*பாதிக்கப்பட்ட எல்லா*
*கண்களுக்கும்* *மருத்துவம் உண்டு*
*சந்தேகக் கண்களைத் தவிர.*
*தோல்விகளுக்கு*
*பின்தான்* *புலப்படுகிறது,*
*அத்தனை பிழைகளும்.*
*இன்பம் ஒன்றும்*
*அடைய முடியா* *தூரமல்ல*
*நீங்கள் கவலையைத் துறக்கும்*
*இடத்தில் தான் உள்ளது.*
*கிடைப்பது எதுவாக இருந்தாலும்.*
*அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.*
*ஆர்வமும், உழைப்பும் உங்களிடமிருந்தால், வெற்றிக்கான, ஒரு கதவல்ல.. ஓராயிரம் கதவுகள்* *உங்களுக்காகத் திறக்கும்.*
*கிடைக்க முடியாத விஷயத்தை* *யோசிப்பதும், அதை அடைய* *முயற்சிப்பதையும் கைவிடுங்கள்.*
*சரியான உழைப்பு இல்லாமல், ஒருவரும் உயர்ந்ததும் இல்லை.*
*செயலில் துணிவு இல்லாமல், துன்பத்தைப் போக்கியவரும் இல்லை.*
*அனுபவங்கள் எவ்வளவு அதிகமாக உள்ளனவோ, அவ்வளவு மேலானதாக*
*உங்கள் வாழ்க்கை அமையும்.*

No comments:

Post a Comment