Saturday 20 January 2024

சந்தர்ப்பங்கள் சவால்கள் . .

 சந்தர்ப்பங்கள் சவால்கள் . .

உங்கள் வாழ்க்கையை
மாற்றி அமைக்க ஒரு நடைமுறை
வழி இருக்கிறது.
பழைய எண்ணங்களை,
பயன்படாத எண்ணங்களை
அடியோடு அப்புறப் படுத்துங்கள்.
புதிய எண்ணங்களால் மனதை நிரப்புங்கள்.
அந்த எண்ணங்களுக்கு
நீங்கள்தான் அதிபதி என்கிற முடிவுக்கு வாருங்கள்.
என் எண்ணங்களுக்கு நான் அதிபதியா, ஆமாம், உங்களு டைய எண்ணங்களுக்கு
நீங்கள்தான் அதிபதி. எண்ணங்களை ஒழுங்குபடுத்தி, அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த நீங்கள் பயிற்சி செய்தால் போதும்.
வாழ்க்கைப் பாதையில்
உயர்ந்த ராஜபாட்டையும் இருக்கிறது. தாழ்ந்த சறுக்கல்
பாதையும் இருக்கிறது.
ராஜபாட்டை, உங்கள் கவனம் முழுவதையும் சாதனை புரியும் குறிக்கோளை நோக்கித் திருப்புகிறது. தாழ்ந்த பாதை, உங்கள் கவனத்தை திசை திருப்பி சக்தியை விரயமாக்குகிறது.
எப்போதுமே
சந்தர்ப்பங்களின் மீதும்
சவால்களின் மீதும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
பிரச்சனைகள், தோல்விகள் என்று எதைக் கருதுகிறீர்களோ அதன் மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்கக் கூடாது. குறிக்கோளை அடைய முடியாது என்பதற்கான காரணங்களை எண்ணிக் கொண்டிருப்பதை விட, குறிக்கோளை அடைவதற்கான காரணங்களிலேயே நீங்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கையினை
உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் நிர்ணயிப்பது இல்லை.
அவற்றைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள் என்பது தான் உங்கள் வாழ்க்கையினை நிர்ணயிக்கின்றது. உங்களின் உலகம் நீங்கள் எண்ணுகின்ற எண்ணங்களைப் பொறுத்தே அமைகிறது.
எல்லா வெற்றிகளும்
நம்மை மையமாகக் கொண்டுதான் உருவாகின்றன.
நமக்குள்ளிருந்துதான் ஆரம்பமாகி அவை வெளிப்பட வேண்டும்.

No comments:

Post a Comment