Monday 23 September 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சுவாமி விவேகானந்தரும்....
பிரதமர் மோடியும்..........
உலக சாதனை படைத்தது மோடியின் ஹவ்டி மோடி நிகழ்ச்சி என்ன சாதனை தெரியுமா? அதுவும் வல்லரசை வழிநடத்தும் பேரரசாம்..
இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் கலந்து கொண்ட “ஹாவ்டிமோடி” நிகழ்ச்சி உலக அளவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக மோடியின் அமெரிக்க பயணம் குறித்து அமெரிக்க ஊடகங்கள் புகழ்ந்து பாராட்டி வருகின்றன.
உலகில் இந்தியாவின் அடையாளமாக மோடி உருவெடுத்த காலம் போய் தற்போது உலகநாடுகளின் அடையாளமாக மோடி மாறிவருகிறார் என்றும் எந்த ஒரு வெளிநாட்டு தலைவர்களையும் அமெரிக்க அதிபரும், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி தலைவரும் போட்டி போட்டு வரவேற்றது இல்லை.
ஆனால் மோடியை அதிபர் டிரம்ப் நேரடியாக சந்தித்து வரவேற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் அதுபோல் அவரை எதிர்த்து அடுத்து வருடம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் துளசி காப்பர்ட் மோடியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
உலக நாடுகள் பலவும் அமெரிக்க தலைவர்களை எதிர்பார்த்து காத்திருக்க ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபரோ மோடியின் பிரச்சாரத்தை கைதட்டி வரவேற்றார் என்றும் அடுத்து ஆண்டு வரக்கூடிய அமெரிக்க தலைவர் தேர்தலில் டிரம்ப்பை ஆதரித்து மோடி பிரச்சாரம் செய்துள்ளார் என்றும் இது அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் ட்ரம்பிற்கு ஆதரவு அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க ஊடகம் ஒன்று உலக வரலாற்றில் வெளிநாட்டை சேர்ந்ததலைவர் ஒருவர் அமெரிக்க அதிபரை ஆதரித்து பிரச்சாரம் செய்வது வரலாற்று சாதனை என்றும் எந்த தலைவரும் படைக்காத உலக சாதனையை நேற்றைய ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபரை ஆதரித்து பிரச்சாரம் செய்து உலக சாதனை படைத்துள்ளார் என்றும் அமெரிக்க ஊடகங்கள் மோடியை புகழ்ந்து எழுதியுள்ளன.
மேலும் அமெரிக்க பிரபல வரலாற்று அறிஞர் ஜான் பேப்பேட் வல்லரசை வழிநடத்தக்கூடிய பேரரசாக இந்தியா வளர்ந்துவிட்டதாகவும் அதன் பேரரசராக மோடி உருவெடுத்துள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசுவார்கள்,அந்த தொகுதி வேட்பாளர் மட்டும் அவ்வளவு நேரமும் கும்பிட்டபடி நிற்பார்..இதை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அந்த வேட்பாளர்களை பார்த்து உண்மையிலே பாவமாக இருக்கும்..
நேற்று இதே போன்ற காட்சியை பார்த்து அதிசயத்தேன்.. காரணம்..?உலகில் நம்பர் ஒன் வல்லரசான அமெரிக்க அதிபர் நம் ஊர் வேட்பாளரைப் போல் அந்த மேடையில் நின்று கொண்டிருக்கிறார்..அவரை ஆதரித்து அவர்கள் நாட்டில் நம் பாரத பிரதமர் பிரச்சாரம் செய்கிறார்..அவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல ஆயிரகணக்கான மக்களும் கரகோஷம் எழுப்புகின்றனர்..அவ்வளவு நேரமும் நம் ஊர் வேட்பாளரைப் போல் சிரித்தபடி அமெரிக்க அதிபர் நின்ற காட்சி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது..உண்மையிலே நமக்கு அமெரிக்கர் என்றால் பெரிய புத்திசாலிகள்,உயர்வானவர்கள் என்ற ஒரு எண்ணமும்..நாம்மைப் பற்றி நமக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையும் எனக்கு(நமக்கு) உண்டு..ஆனால் நேற்று இரவோடு அந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி, இந்தியர்களாகிய நாம் இந்த உலகில் யாருக்கும் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்ற ஒரு புதிய நம்பிக்கையை என்னுள் நேற்றைய இந்த நிகழ்வு ஏற்ப்படுத்தியுள்ளது.. அதற்கு காரணம் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களே..அவருக்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கமும் நன்றியும்..
நரேந்திரனுக்கு(விவேகானந்தர்) பின் நரேந்திர மோடி அவர்களே இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை தேடிதந்தவர்..தந்து கொண்டிருப்பவர்..இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என பெருமைபடும் காலம் இந்தியர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக வரும்..அது வரை அவருக்கு நீண்ட ஆயுளையும்,உடல் ஆரோக்கியத்தையும் தந்திட ஆண்டவனை பிரார்த்திப்போம்..
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment