Monday 30 September 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மதுரை மாநகர பொதுமக்களுக்கு காவல் ஆணையர் அவர்களின் முக்கிய வேண்டுகோள்.
---------------------------------------------------------------------------
*இளைஞர்களில் ஒரு சிலர் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும், வேலைக்கு செல்லாமலேயே சுகபோக ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவும் குற்ற சம்பவங்களில் (வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை, கன்னக்களவு, ) ஈடுபட்டுவருகிறார்கள்.
*இந்த குற்ற சம்பவத்திற்கு, உறவினர் மற்றும் நண்பர்களை ஏமாற்றி இரு சக்கர வாகனங்களை இரவல் வாங்கிசென்று சமூகவிரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
*ஆகவே யாரேனும் உங்களது இரு சக்கர வாகனத்தை இரவல் கேட்டால் தயவு செய்து சரியான காரணம் தெரியாமல் கொடுத்து உதவ வேண்டாம்.
*அதையும் மீறி யாரேனும் இரு சக்கர வாகனத்தை கொடுத்து தங்களது வாகனத்தை இளைஞர்கள் குற்ற செயலுக்கு பயன்படுத்தினால் அந்த குற்றச்செயலில் தாங்கள் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் வாகனத்தை கொடுத்த குற்றத்திற்காக தாங்களும் குற்றவாளியா கருதப்பட வாய்ப்பு உண்டு.
* தங்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி உண்டு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment