Saturday 28 September 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

``#அவமானமெல்லாம் வெகுமானம்!'' சைக்கிளில் டெலிவரி செய்யும் கரூர் #மாணவர் 👏👏👏
`15 நிமிஷத்துல உணவு வேணும்'னு ஆர்டர் பண்ணி இருந்தார். 8 நிமிஷத்துல அவர் முன்னால நின்னேன். 'சைக்கிளை வெச்சுக்கிட்டு இவ்வளவு வேகமா எப்படி வந்த? எதுவும் ஜீபூம்பா வேலை காட்டுறியா?’னு கேட்டார்.
'நடராஜா சர்வீஸ்', சைக்கிள், மாட்டு வண்டி என்று நம் முன்னோர்கள் பயணம் மேற்கொண்ட 'வாகனங்கள்' எல்லாம் இப்போது அசைபோடும் விஷயமாக மாறிவிட்டது. ஆனால், கரூரைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர் வாழ்வியலுக்காக சைக்கிளில் உணவு டெலிவரி செய்து வருகிறார்.
#கரூர்நகரில் ஒரு மழை பெய்து ஓய்ந்த இரவில்தான் அவரைச் சந்தித்தோம். 19 வயதுதான் ஆகிறது, ரகுநாத்துக்கு. ஆனால், அவரது பேச்சில், அவரது வாழ்நாளுக்கும் தேவையான பக்குவம் வாளிப்பாக வாழ்கிறது. "வாழ்த்துகள், எப்படி இப்படி?.." என்ற பீடிகையோடு, #ரகுநாத்திடம் 😍 பேச்சுக்கொடுத்தோம்.
``அப்பா பேரு பொன்னுசாமி, அம்மா பேரு ரேவதி. தங்கச்சி கற்பகவள்ளி ஆறாவது படிக்கிறா. அப்பா ஒரு கம்பெனியில மெக்கானிக்கா இருக்கார். அம்மா கூலி வேலைக்குப் போறாங்க. எங்களுக்கு கால்பாதம் படுற அளவுக்குக்கூட சொந்தமா நிலமில்லை. வாடகை வீட்டுலதான் வசிக்கிறோம். அப்பாவும், அம்மாவும் சேர்ந்து மாசம் 14,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறாங்க. அதுல, வீட்டு வாடகை 3000 ரூபாய் போய்ட்டுனா, மீதியுள்ள 11,000 ரூபாயை வெச்சுதான் நாலு பேரும் மாசம் முழுக்க சாப்புடணும்; நல்லது கெட்டதுகளுக்கு செலவு பண்ணணும்; மத்த செலவுகளைப் பண்ணணும்ங்கிற நிலைமை. அப்பா, அம்மாவால இந்த வருமானத்துல குடும்பத்தை இழுத்துப் புடிச்சு ஓட்ட முடியலை. பலநாள் சாப்பிட முடியாத நிலைமை வந்துச்சு. இருந்தாலும், 'நாங்க படுற கஷ்டத்தை நீங்க படக்கூடாது'னு எங்க ரெண்டு பேரையும் படிக்க வெச்சாங்க. அதனால், 'அவங்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது'னு நான் 11 ம் வகுப்பு படிக்கிற காலத்திலிருந்தே பகுதி நேரமா வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.👏
டெக்ஸ்டைல்ஸ்கள்ல பிசிறு எடுக்கிற வேலை, மில்லுல தேங்காய் மட்டை வெட்டிப்போடுற வேலைனு கிடைக்குற வேலைகளுக்குப் போக ஆரம்பிச்சேன். தினமும் மாலை 6 மணி தொடங்கி, இரவு 12 மணி வரைக்கும் வேலை பார்ப்பேன். 2000 ரூபாய் வரை மாசம் கிடைக்கும். இந்தச் சூழலில்தான், ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, 11 ம் வகுப்பு விடுமுறையில் நண்பர் ஒருத்தரோடு சேர்ந்து, ஒரு டெக்ஸ்டைல்ஸ்ல பிசிறு எடுக்கிற கான்ட்ராக்ட்டை வாங்கி செய்ய ஆரம்பிச்சோம். மாசம் 3500 ரூபாய் வரை கிடைச்சுச்சு. அதை வெச்சு கரூர்ல ஒரு கல்லூரியில பி.சி.ஏ கோர்ஸ் சேர்ந்தேன். கல்லூரி முடிந்தபிறகு மாலையிலேருந்து இரவு 11 மணி வரை வேலை பார்த்தேன்.
ஆனா, நாளாக நாளாக கான்ட்ராக்ட் வருவது குறைய, மாசம் 1500 ரூபாய்தான் வருமானம் வந்துச்சு. அப்போதான், எங்க அப்பாவோடு வேலை பார்க்குற மேகநாதன் என்பவர், வருமானம் பத்தாத காரணத்தினால், பார்ட் டைம் ஜாப்புக்காக ஆன்லைனில் விண்ணப்பிச்சார். அவருக்கு பிரபல உணவு டெலிவெரி ஸ்டார்ட் அப் (சொமேட்டோ) கம்பெனியில வேலை கிடைச்சுச்சு. அவங்க, 'இன்னும் ஓர் ஆள் வேணும்'னு கேட்டிருக்காங்க.
உடனே, அவர் என்னை சிபாரிசு பண்ணினார். நானும் வருமானம் பத்தாம தவிச்சதால, உடனே சம்மதிச்சு, அந்த வேலையில் சேர்ந்துட்டேன். '#சைக்கிள்வாகனம்' என்றுதான் பதிஞ்சேன். உடனே சக டெலிவரி பையன்கள், 'ஏன்டா இந்த விஷப்பரீட்சை. இரண்டு நாள்கூட உன்னால சைக்கிள்ல போய் டெலிவரி பண்ணமுடியாது. உடம்பும் ஒத்துழைக்காது; மத்தவங்க பேசுற கேலியில, உன் மனசும் அதுக்குப் போக இடம்கொடுக்காது'னு பயமுறுத்துனாங்க. நான் அதை, இந்தக் காதுல வாங்கி, அந்தக் காதுல விட்டுட்டு, சைக்கிளை எடுத்து #மிதிக்க ஆரம்பிச்சேன்.
அதுக்காக புது சைக்கிள்கூட வாங்கவில்லை. நான் ஏற்கெனவே பயன்படுத்தி வந்த பழைய சைக்கிளையே உணவு டெலிவரி பண்ணுவதற்குப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். கடந்த ஜூலை மாதம் 26 ம் தேதி வேலையில் சேர்ந்தேன். இன்னிக்குவரைக்கும் சைக்கிள்ல போய்தான் #டெலிவரி பண்றேன். மாலை ஆறரைக்கு லாக் இன் பண்ணினேன்னா, இரவு பத்தரை மணிக்கு லாக் அவுட் பண்ணுவேன். தினமும் குறைந்தப்பட்சம் 5 ஆர்டர்கள் வரை கிடைக்கும். அதிகபட்சம் 8 வரை கிடைக்கும். சைக்கிள்ல அதிகபட்சமா #கரூர் நகரத்துக்குள்ள 5 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டி இருக்கும். மாசம் இப்போ 4000 ரூபாய்வரை கிடைக்குது.
அதேபோல, கரூர் ரயில்வே ஸ்டேஷன்ல ஒருத்தர், '15 நிமிஷத்துல உணவு வேணும்'னு ஆர்டர் பண்ணி இருந்தார். #8நிமிஷத்துல அவர் முன்னால நின்னேன். 'சைக்கிளை வெச்சுக்கிட்டு இவ்வளவு வேகமா எப்படி வந்த? எதுவும் ஜீபூம்பா வேலை காட்டுறியா?. அசத்தலான ஆளுப்பா நீ'னு பாராட்டினார்.💪👌👍
வாழ்த்துக்கள் #தம்பி 😍💐#

No comments:

Post a Comment