Wednesday 18 September 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*" மற்றவர்களின் துயரங்களை..''*
........................................
தன் துன்பங்களை மறைத்துக் கொண்டு மற்றவர்களை
உற்சாகப்படுத்தும் மிகச் சில நல்ல மனிதர்கள்
இன்னும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்..
பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. .
அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோயாளிகள்.
ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை.
இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது.
எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர… தனிமை.. தனிமை.. தனிமை..!
சன்னல் படுக்கை அருகில் புற்றுநோய் நோயாளி... மற்றவர் காலில் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் இருவரும் நட்பாகி விட்டனர்.
ஒருமுறை எலும்பு முறிவு நோயாளி, சன்னல் அருகில் இருந்த நோயாளியிடம் சொன்னார்..
உங்களுக்கு பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது..எனக்கு அதுகூட இல்லை. என்றார்..
கவலைப்ப்படாதீர். சன்னலுக்கு வெளியே என்னென்ன கண்கிறேனோ, அத்தனையும் உங்களிடம் கூறுகிறேன் என்றார் அந்த புற்று நோய் நோயாளி,
அடுத்த நாளில் இருந்து தான் கண்ட காட்சிகளை சுவைபட கூறலானார்..
”சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா.ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன என்று தினமும் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்.
ஒரு நாள்அந்த புற்றுநோய் நோயாளி இறந்து விட்டார்..
மீண்டும் எலும்பு முறிவு நோயாளிக்கு வெறுமை.
ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித் தரும்படி கேட்டுக் கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.
இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க அங்கே பெரிய சுவர்..!
வேறு எதுவுமே இல்லை..!
அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்? மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..
செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..
''நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்து இருக்காது.புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்து விட்டிருந்தார்..!”
ஆம்,நண்பர்களே.,
*தமது வாழ்வை மனித இனத்துக்கு ஒரு முன் மாதிரியாக விட்டுச் சென்றவர்கள், பசிப்பிணி, துயரங்கள் இவற்றை எல்லாம் அனுபவித்தவர் களால்தான் மட்டுமே மற்றவரின் பிரச்சினைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment