Saturday 28 September 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மூன்றாயிரம் ஆண்டுக்ளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகின் பழமையான மொழியான தமிழில் கனியன் பூங்கன்றனார் எழுதியிருப்பதாக பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபையில் பேசினார்.
பிரதமர் மோடி இன்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் "இந்தியாவில் மிகப்பெரிய அளவில் சுகாதாரத்திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் 5 ஆண்டுகளில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் போல் உலகம் முழுவதும் தூய்மை திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்றார்.
இதேபோல் இந்தியாவில் 37 கோடி ஏழைகளுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டது, மற்றும் 50 கோடி மக்களுக்கு சுகாதார திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறித்தும் பிரதமர் மோடி பேசினார்
அப்படியே பயோமெட்ரிக் அடையாள திட்டமான ஆதார் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுவது குறித்தும் அதன் மூலம் ஊழல் இல்லாமல் மக்களுக்கு திட்டங்கள் சேர்க்கப்படுவதையும் விவரித்தார்.
மேலும் பிளாஸ்டிக் தடை குறித்தும் புதிய வீடுகள் கட்டும் திட்டம் குறித்தும் விரிவாக பேசினார். நீர் பாதுகாப்பை இந்தியா வலிறுத்தி வருவதாகவும், சாலைகள் அமைக்கும் திட்டம் குறித்தும் பேசினார்.
குறிப்பாக மூன்றாயிரம் ஆண்டுக்ளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகின் பழமையான மொழியான தமிழில் கனியன் பூங்கன்றனார் எழுதியிருப்பதாக பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபையில் பேசினார். இதன் அர்த்த்தையும் தெளிவாக விளக்கி சொன்ன மோடி, நாம் அனைவருக்கும் எல்லா இடங்களும் எல்லாருக்கும் சொந்தம், எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இந்த உணர்வு இந்தியாவுக்கு தனித்துவமானது என்றார்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment