Monday 23 September 2019

''உண்மையும்,பொய்யும்''

''உண்மையும்,பொய்யும்''
........................................
உண்மைக்கு என்றும் அழிவில்லை , எப்போதும் உயர்வு தரும் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் அதைப் பின்பற்றுபவர்கள் மிக மிகக் குறைவு.
பொய் அதற்கு நேர் எதிர்.ஏன் இப்படி ? என்று ஆராய்ந்து பார்த்தோமானால் உண்மையின் உன்னதம் காலம் கடந்து உணர்த்துவதால் தான்.
மேலும் உண்மையை நிரூபிப்பதற்கு மிகவும் சிரமம் மேற்கொள்ள வேண்டும்.
ஆகவே உண்மையைப் பின்பற்றுபவர்கள் குறைவு. ஆனால் பொய்,புரட்டு உடனே பலன் தருகின்றது.
இருந்தாலும் உண்மை என்றும் உண்மை தான்.
ஒருநாள் அயல்நாட்டு அறிஞர்கள் முல்லாவிடம் உரையாடிக் கொண்டு இருந்தார்கள்..
அப்போது அந்த கல்விமான்களில் ஒருவர் முல்லாவிடம் உலகத்தில் ‘
’பொய்யை’’க் காட்டிலும் ‘’உண்மை’’யின் மதிப்பு அதிகமாக இருக்கிறது.
அது ஏன்? என்னும் சந்தேகத்தைக் கேட்டார்..
அதற்கு முல்லா இதற்கு பதில் சொல்லுமுன் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்..பதில் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு அவரிடம், .
’’ உலகத்தில் இரும்பை விட தங்கத்திற்கு அதிக மதிப்பு இருக்கிறதே.. அது ஏன்.? என்று பதில் கேள்வி கேட்டார்.
உலகத்தில் இரும்பு தாராளமாக கிடைக்கிறது.எங்கும் கிடைக்கிறது..
ஆனால் தங்கம் அப்படியல்ல.மிகவும் குறைவாக எங்காவது ஒரு இடத்தில் கிடைக்கிறது. அதுவும் அரிதாகத் தான் கிடைக்கிறது..அதனால்தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார் அந்த கல்விமான்..
ஆம்..இது பொய்க்கும், உண்மைக்கும் பொருந்தும்..
பொய் இந்த உலகத்தில் நிறைந்து காணப்படுகிறது..
யாரிடமும் தாராளமாக கிடைக்கிறது..ஆனால் உண்மை பேசுபவர்களை காண்பதற்கு உலகத்தில் மிகவும் அரிதாக இருக்கிறது.
இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால் தான் அதற்கு மதிப்பு அதிகம் என்றார் முல்லா..
ஆம்.,நண்பர்களே..,
”பொய் தற்காலிகமாக வெல்வது போலத் தோன்றினாலும், கடைசியில் நிரந்தரமாக வெல்வது உண்மை தான்..
உண்மைக்கு ஒரு போதும் அழிவில்லை, பொய்மையால் என்றும் நன்மை இல்லை..🌹🙏🏻🌺

No comments:

Post a Comment