Friday 20 September 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

காஷ்மீர் விவகாரம்: பாக்., முயற்சி மீண்டும் தோல்வி..
ஐ.நா., மனித உரிமைக் கவுன்சிலின் 42வது கூட்டம் செப்., 9 முதல் செப்., 27 வரை நடைபெறுகிறது. காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் தரப்பில் பிரச்னை எழுப்பப்பட்டது. கூட்டத்தில் காஷ்மீர் தொடர்பான தீர்மானத்தை கொண்டுவரவும் பாக்., முயற்சிகளை மேற்கொண்டது.
இந்த தீர்மானத்தை தாக்கல் செய்ய செப்., 19 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவகாசம் நேற்றுடன் (செப்., 19) முடிவடைந்ததை அடுத்து பாகிஸ்தானால் தீர்மானத்தை தாக்கல் செய்ய முடியவில்லை. காரணம் என்ன..?ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் 47 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த கவுன்சிலில் தீர்மானத்தை கொண்டுவர, குறைந்தபட்சம் 16 நாடுகளின் ஆதரவும், அந்த தீர்மானத்தில் வெற்றி பெற 24 நாடுகளின் ஆதரவும் தேவை. ஆனால் தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கான 16 நாடுகளின் ஆதரவு கூட இல்லாததால் பாகிஸ்தானால் தீர்மானத்தை தாக்கல் செய்ய முடியவில்லை.
சமீபத்தில் பாக்., பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதற்கு 58 நாடுகள் ஆதரவு தெரிவித்ததாகவும் பதிவிட்டிருந்தார். 47 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட கவுன்சிலில் 58 நாடுகளின் ஆதரவு இருப்பதாக கூறியதாக சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளானார்.
இந்நிலையில் 58 நாடுகளின் ஆதரவு இருப்பதாக கூறியும் தற்போது 16 நாடுகளின் ஆதரவை கூட பெற முடியாததால் பாக்கிஸ்தான் மீண்டும் தோல்வி அடைந்தது.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment