Monday 23 September 2019

மாபெரும் சபையில்.....

மாபெரும் சபையில்.....
போப்புக்கு அடுத்தபடியாக மோடிக்குத்தானாம்! - 'ஹவுடி மோடி' குறித்து தகவல்..
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், செப்டம்பர் 22-ம் தேதி பிரதமர் மோடி 50,000 இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றுகிறார். அங்குள்ள என்.ஆர்.ஜி ஸ்டேடியத்தில், நாளை மாலை 6 மணிக்கு மோடி மேடையேறுகிறார். இரவு 9 மணிக்கு கூட்டம் நிறைவடைகிறது. நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் பங்கேற்க உள்ளார்.
கூட்டம் முடிந்தபிறகு, 10.30 மணிவரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதில், 400 கலைஞர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சி இந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ் மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கப்படுகிறது. கூட்டம் முடிந்த பிறகு, பிரதமர் மோடி இரவே நியூயார்க் புறப்படுகிறார். அமெரிக்காவில், போப் ஆண்டவருக்குப் பிறகு எந்தவொரு தலைவரின் உரையையும் கேட்க இவ்வளவு மக்கள் கூடியதில்லை. வெளிநாட்டு அரசியல் தலைவருக்கு இந்த அளவுக்குக் கூட்டம் கூடுவது இதுவே முதன்முறை.
கூட்டத்துக்கு முன்னதாக அமெரிக்கா வாழ் இந்தியர்கள், பிரதமர் மோடியை காரில் ஊர்வலமாக அழைத்துச்செல்லவும் முடிவெடுத்துள்ளனர். ஊர்வலத்தில் 200 கார்கள் பங்கேற்கின்றன. இரு நாட்டுக் கொடிகளையும் ஏந்தியவாறு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஊர்வலத்தில் கலந்துகொள்கின்றனர். 1,500 தன்னார்வத் தொண்டர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
Texas India Forum அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பிரீத்தி தவரா கூறுகையில், ``உலகின் இரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இரு நாடுகளுக்கிடையே வலுவான உறவு உருவாகியுள்ளது. அமெரிக்காவில் 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறோம். இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து மேடையில் தோன்றுவது எங்களுக்குப் பெருமையாக உள்ளது. நிகழ்ச்சியில் அமெரிக்காவின் 50 மாகாணங்களில் வசிக்கும் இந்தியர்களும் பங்கேற்கின்றனர்'' என்றார்.
இந்தியத் தலைவர்கள் இதற்கு முன் வாஷிங்டன், நியூயார்க், சான்பிரான்ஸிஸ்கோ போன்ற நகரங்களில் உரையாற்றியுள்ளனர். இந்த முறை மோடி ஹூஸ்டனைத் தேர்வுசெய்ததற்குக் காரணம் உள்ளது. இந்தியாவுடன் ஆண்டுக்கு ரூ.30,000 கோடி அளவுக்கு ஹூஸ்டன் நகரம் வர்த்தகத்தில் ஈடுபடுகிறது. ஹூஸ்டனில் உள்ள 28 நிறுவனங்கள், இந்தியாவில் 68 கிளைகளைப் பரப்பியுள்ளன.
ஹூஸ்டனில் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதன் காரணமாகவே, ஹூஸ்டன் நகரை மோடி தேர்வு செய்துள்ளார். பிரதமர் மோடியை வரவேற்று ஹூஸ்டன் நகரில் பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment