Friday 20 September 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இந்திய அரசின் வரலாற்று மாற்றங்கள்: ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய எம்.பி.க்கள்..
ஐரோப்பிய கன்சர்வேட்டிவ் ரிபார்மிஸ்ட் குரூப் எம்.பி. ஜெப்ரி வேன் ஓர்டன் இன்று பேசுகையில், " பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதையும்,நிதியுதவி அளிப்பதையும் எல்லை தாண்டி இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதையும் அனுமதிக்கிறது. காஷ்மீரின் பலபகுதிகளை சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது.
இந்தியாவின் மிகவும் அழகான பகுதி காஷ்மீர்.கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் நிலையில்லாத பகுதியாக இருந்தது, தீவிரவாதத்தாலும், வன்முறையாலும், அடிப்படைவாதத்தாலும் அந்த பகுதி பாதிக்கப்பட்டு வந்தது. அதை மாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது. சட்டப்பூர்வமாக அந்த பகுதி முழுமையும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சில பகுதிகள் மட்டும் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் வரலாற்று மாற்றங்களால், ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்தியர்கள் போன்று சமமான உரிமையைப் இப்பொழுது பெற்று வருகிறார்கள். 370 பிரிவை நீக்கியதன் மூலம் பிரதமர் மோடி, காஷ்மீர் மக்களுக்கு சமமான உரிமைகளை வழங்கி இருக்கிறார். பாகிஸ்தானில் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள் எவ்வாறு பறிக்கப்படுகின்றது என்பதை அனைவரும்பார்க்க வேண்டும்.
தீவிரவாதிகளுக்கும், தீவிரவாத தலைவர்களுக்கும் ஆதரவு கொடுத்து எல்லை தாண்டி தாக்குதல் நடத்த துணை புரிகிறது பாகிஸ்தான். இரு நாடுகளும் அமைதிப்பேச்சு மூலம் பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இத்தாலி எம்.பி. புல்வியோ மார்டிசிலோ பேசுகையில், "உலகின் மிகச்சிறந்த ஜனநாயகம் உள்ள நாடு இந்தியா. காஷ்மீர் விவகாரத்தை நாம் பரந்த நோக்கத்தோடுதான் பார்க்க வேண்டும். இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள், ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல்களை நாம் கவனிக்க வேண்டும். இந்தியாவைத் தாக்கும் தீவிரவாதிகள் நிலவில் இருந்து குதிக்கவில்லை. அண்டை நாட்டில் இருந்து தான் வந்துள்ளார்கள். ஆதலால் நாம் ஜனநாயக நாடான இந்தியாவுக்குத்தான் ஆதரவு அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்
சுலோவோகிய எம்.பி. மிலன் உர்கிக் பேசுகையில் " ஜம்மு காஷ்மீர் சீரமைப்பு என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்தியாவில் என்ன நடக்கிறது என்று நமக்கு உறுதியாகத்தெரியாது. எந்த ஐரோப்பிய நாடுகளின் கொள்கை குறித்தும் இந்திய நாடாளுமன்றம் இதுவரை விமர்சித்தது இல்லை தலையிட்டது இல்லை. அதோபோன்று நாமும் செயல்பட்டு, இந்தியாவின் இறையான்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்
இதேபோன்று ஜெர்மன் எம்.பி.க்களும் இந்தியாவுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானை கண்டித்தும் பேசினர்.
எங்கேயோ உள்ள ஐரோப்பிய எம்.பி.களுக்கு காஷ்மீரைப் பற்றியும்,இந்த சட்ட நீக்கத்தினால்,அந்த மக்களுக்கும் இந்தியாவுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்த அளவுக்கு,இந்த தமிழக எம்.பி.களுக்கு தெரியவில்லையே ஏன்?உண்மையிலேயே தெரியவில்லையா?அல்லது தன் சுயநல அரசியலுக்காக நாட்டைப் பற்றிய கவலை இன்றி இப்படி நடந்து கொள்கின்றார்களா?உலக அளவில் பாகிஸ்தானும்,இந்திய அளவில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மட்டும்தானே இப்படி எதிர்க்கினறனர்.உலக அளவில் முட்டாள்கள் நிறைந்த நாடு பாக்கிஸ்தான் என உலகநாடுகள் கருதுவது போல்,இந்திய அளவில் முட்டாள்கள் நிறைந்த மாநிலம் தமிழகம் என கருதும் நிலைக்கு இந்த திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் ஆக்கிவிட்டனவே.இந்த ஒருசில அரசியல் தலைவர்களின் சுயநலத்தால், முட்டாள்தனத்தால் நம் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் அவமானமே..
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment