Saturday 22 June 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இந்த தொகுப்பில் கண்ணதாசன் பாடல் தவிர சில மற்ற கவிஞர் பாடலையும் சேர்த்திருக்கிறேன் .
பாடலில் முழுவதும் அதே வார்த்தை/எழுத்து முடிவடையும் பாடல்கள்
"மே" - 'அன்பு நடமாடு கலைக்கூடமே' அவன்தான் மனிதன் படம்
இன்னொரு பாடல் இதுபோல - 'இரவும் நிலவும் வளரட்டுமே'-கர்ணன்
'நிலா ' - அன்று வந்ததும் இதே நிலா - பெரிய இடத்து பெண்
'நிலா ; - வான் நிலா நிலா அல்ல - பட்டினப்ரவேசம்
'வந்தீங்க '- பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க - தர்மம் தலை காக்கும்
'நாம் '-"ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் " தாய் சொல்லை தட்டாதே
'ஆட்டம் '- "தோரோட்டம் ஆனந்த செண்பக "- நூல்வேலி
'அடி'- "யாரடி வந்தார் என்னடி சொன்னார் - வானம்பாடி
'தான் '- "அத்தான் என்னத்தான் அவர் .." பாவமன்னிப்பு
'தேன்'- "பார்த்தேன் சிரித்தேன் "- வீர அபிமன்யு
'வா ' - "அத்தைமகனே போய் வரவா "- பாதகாணிக்கை
'டா'- "சட்டி சுட்டதடா " - ஆலயமணி
'தா '-"கொடி அசைந்ததும் காற்று வந்ததா "- பார்த்தால் பசி தீரும்
'காய் "- "அத்திக்காய் காய் காய் .." பலே பாண்டியா
'ம் '- " தென்றல் வரும் சேதி வரும் "- பாலும் பழமும்
'ல் ' - 'உடலுக்கு உயிர் காவல் '- மணப்பந்தல் - கடைசீ சரணம் தவிர பாடல் முழுதும் 'ல் ' முடிவடையும் வரிகள்
'வளை' - "சின்னவளை முகம் சிவந்தவளை "- புதியபூமி - சிலவரிகள் வளை - இல்லாது இருக்கலாம். ஆனால் '26 ' வளை இதில் இருக்கும்
'ம்' - "பாலிருக்கும் பழமிருக்கும்"- பாவமன்னிப்பு - பல வரிகள் முடிவில் 'ம்' இருக்கும்
'ஒன்று ' - "தூங்காத கண்ணென்று ஒன்று .." குங்குமம் - பாதி பாடல் மேல் ஒன்று - எல்லா இடத்திலும் இருக்கும்.
இரண்டு இரண்டு வார்த்தை கொண்டு புனைந்த பாடல்
"சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய் " தாய் சொல்லை தட்டாதே
"தொட்டு விட தொட்டு விட தொடரும் " - தர்மம் தலை காக்கும்
"எதோ எதோ ஒரு மயக்கம் "- குடும்பத்தலைவன்
இவை எல்லாம் கண்ணதாசன் கைவண்ணம்
'பால் ' - "பால் தமிழ் பால் " ரகசிய போலீஸ் 115
'நாடு' - "நாடு அதை நாடு "- நாடோடி
இவைகள் வாலியின் கைவண்ணம்
'ஆட்டம் '- "கண்களும் காவடி சிந்தாடட்டும் "- எங்கவீட்டு பிள்ளை
இந்த பாடல் ஆலங்குடி சோமு தந்தது .
ரசிப்போம் மகிழ்வோம்
நன்றி வி கே சங்கர்

No comments:

Post a Comment