Thursday 27 June 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இசைத் தமிழின் நினைவலைகள்..
26-6-2019--அறிவிப்பு பதிவு
பழம்பெரும் இசைக்கலைஞர் திரு தண்டபாணி தேசிகர் அவர்களின் நினைவுநாள் ஆகும்.
எம். எம். தண்டபாணி தேசிகர் (பிறப்பு: ஆகத்து 27, 1908 - சூன் 26, 1972) ஒரு தமிழிசைக் கலைஞர். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். பல தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
-
வாழ்க்கைச் சுருக்கம்
தண்டபாணி தேசிகர் சென்னை மாகாணம் நன்னிலத்துக்கு அருகில் உள்ள திருச்செங்காட்டங்குடி என்ற ஊரில் முத்தையா தேசிகருக்கு மகனாகப் பிறந்தார். மாணிக்க தேசிகர், கும்பகோணம் ராசமாணிக்கம் பிள்ளை ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்றார். தெருவெங்கும் திருப்பாக்களைப் பாடி, தேவாரப் பாடகாசிரியராக அமர்ந்திருந்த தண்டபாணி தேசிகரை பட்டினத்தார் திரைப்படம் அவரைச் சென்னைக்கு இழுத்து வந்தது. பட்டினத்தார், நந்தனார் உட்படப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
-
1952 தியாகராசர் ஆராதனை விழாவில் தண்டபாணி பாட அழைக்கப்பட்டார். அவரின் வழமை போல அவர் தமிழ்ப் பாட்டு ஒன்றோடு தொடங்கினார். பின்னர் அவர் தெலுங்கு, சமசுகிருத பாடல்களைப் பாடினார். இறுதியாக அவரின் வழமை போல தமிழ்ப் பாட்டோடு முடித்தார்.
-
நடித்த திரைப்படங்கள்
பட்டினத்தார் (1936)
வள்ளாள மகாராஜா (1937)
தாயுமானவர் (1938)
மாணிக்கவாசகர் (1939)
நந்தனார் (1942)
திருமழிசை ஆழ்வார் (1948)
-
விருதுகளும் பட்டங்களும்
சங்கீத சாகித்திய சிரோமணி பட்டத்தை 1951 ஏப்ரல் 3 ஆம் நாள் எம். பக்தவத்சலம் வழங்கிக் கௌரவித்தார்.
சங்கீத கலாசிகாமணி விருது, 1955, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (மிருணாளினி சாராபாய் தலைமை)
இசைப்பேரறிஞர் விருது, 1957[2]; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம்
சங்கீத நாடக அகாதமி விருது, 1969[3]
-
நன்றி
அன்புடன்
நிர்வாகிகள்
நடுவர்கள் with Murugesh Balachandar and Others
நன்றி மீனாள் காந்தி

No comments:

Post a Comment