Friday 21 June 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இழப்பு... உழைப்பு....
ஒரு பெரிய டிவி கம்பனியில் ஆன்கர் (Primary anchor) ஆகவேண்டும் என்பது என் ஆசை.
ஆனால் எந்த ஜர்னலிசம் டிகிரியும் என்னிடம் இல்லை. பொலிட்டிகல் சயன்ஸ் டிகிரி படித்துவிட்டு ஏபிசி சேனலில் டெலிபோன் அட்டண்டர் ஆக வேலைக்கு அப்ளிகேசன் போட்டேன். அதுகூட கிடைக்கவில்லை.
அதன்பின் பள்ளிக்கூட மாணவர்களுக்கு செய்திகளை தொகுக்கும் சேனல் ஒன் எனும் தொலைகாட்சியில் செய்திகளின் உண்மை நிலவரத்தை செக் செய்யும் ஃபேக்ட் செக்கர் எனும் வேலையில் சேர்ந்தேன். நான் செய்யும் வேலையை 10 வருடமாக செய்யும் நபர்கள் இருந்தார்கள். பள்ளி மாணவர்கள் மட்டுமே பார்க்கும் தொலைகாட்சியில் பணியாற்றினால் மிகப்பெரிய ஒரு சானலில், உலகம் அறிந்த செய்தி ஆங்கர் ஆகவேண்டும் எனும் ஆசை எப்படி நிறைவேறும்? அது மிகப்பெரும் போட்டிகள் நிறைந்த ஒரு உலகம். எனக்கு தொலைபேசி அட்டண்டர் வேலையை கூட அவர்கள் கொடுக்க முன்வரவில்லை.
எதாவது ரிஸ்க் எடுக்கவில்லை என்றால் இப்படியே இருக்கவேண்டியதுதான் என உணர்ந்தேன். அதன்பின் நானாக எனக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுத்துகொண்டேன். நாமே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியின் விடியோ தொகுப்பை தயாரித்தால் என்ன என? பர்மா கிளம்பினேன். அங்கே போராடும் தாய்லாந்து தீவிரவாத இயக்கத்தினரை சந்தித்து விடியோ எடுக்க திட்டமிட்டேன். லீவு போட்டுவிட்டு என்னிடம் இருந்த காசை எல்லாம் வைத்து ஒரு விடியோ காமிரா வாங்கிக்கொண்டு பர்மா போனேன். நான் ஒரு செய்திதொலைகாட்சி நிபுனர் என பொய் சொன்னேன். பர்மாவில் கரப்பான்பூச்சிகள் ஊறும் ஓட்டலில் மாதக்கணக்கில் தங்கி தொடர்புகளை உண்டாக்கி கடைசியில் தீவிரவாதிகளை கண்டுபிடித்து போய் பேட்டியும் எடுத்தேன்.
காமிராமேன், பேட்டி எடுப்பாவ்ர் எல்லாமே நாந்தான். அதன்பின் அமெரிக்கா வந்து நான் வேலை செய்த சானலுக்கு அந்த விடியோவை இலவசமாக கொடுத்தேன். முதல் முதலாக பள்ளீ மாணவர்களுக்கு என்னுடைய அந்த செய்திதொகுப்பு ஒளீபரப்பானது.
அதன்பின் "என்னுடைய தங்கும் செலவு, உணவை மட்டுமாவது ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு செய்தி தொகுப்பாளர் வேலை கொடுங்கள்" என சானலிடம் கேட்டேன். ஒப்புக்கொண்டார்கள். வியட்நாம், ருவாண்டா, ஆப்காகிஸ்தான் என யாருமே போகதயங்கும் நாடுகளுக்கு போனேன். அதிபயங்கரமான தீவிரவாதிகளை சந்தித்து பேட்டி எடுத்தேன். சில வருடம் இப்படி எந்த சம்பளமும், வருமானமும் இன்றி உணவும், தங்குமிடமும் மட்டும் போதும் என வேலை செய்தேன்.
ருவாண்டாவில் நிகழ்ந்த 10 லட்சம் பேர் படுகொலை நிகழ்வின் போது அங்கே இருந்ததால் எனக்கு பெயர் கிடைத்தது. திரும்பி வந்தேன். சி.என்.எனில் துவக்கநிலை ஆன்கராக வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தனியாக ஸ்லாட் எதுவும் கிடைக்கவில்லை. மற்ற பெரிய ஆங்கர்கள் பேசுகையில் அருகே நின்று "ஆமாம் சாமி" என தலையாட்டும் வேலை, அவர்கள் லீவு போட்டால் ஸ்லாட்டை நிரப்பும் வேலை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, நள்ளிரவு 2 மணி ஸ்லாட் என யாருமே செய்ய தங்கும் வேலைகளை, நாட்டின் எந்த மூலைக்கும் பறந்து சென்று செய்தேன்.
ஆபத்தான அசைன்மென்டா, கேவலமான அசைன்மெண்டா, மோசமான டைம் ஸ்லாட்டா, கிரிஸ்துமஸ் தினத்தன்று வேலையா? கூப்பிடுங்கள் ஆண்டர்சனை எனும் அளவு அடிமட்ட அளவில் பணியாற்றியபின் பல ஆண்டுகள் கழித்து முதன்முறையாக காலை நேரத்தில் ஒரு ஸ்லாட்டை எனக்கென ஒதுக்கினார்கள்.
இந்த ஒரு வாய்ப்புக்குதான் ஆண்டாண்டு காலமாக இத்தனை அவதிப்பட்டேன்? அதை சிக்கென பிடித்துக்கொண்டேன். அதன்பின் இறங்குமுகமே இல்லை. தொடர் ஏற்றம்தான். இன்று நாடறிந்த பிரபலம் நான். ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகளுடன் நட்புறவு, அமெரிக்காவின் முதல் நிலை ஜர்னலிஸ்ட் எனும் அந்தஸ்து..அனைத்தும் இத்தனை இழப்புகளையும் தாங்கி ஆண்டாண்டு காலமாக உழைத்ததால் வந்தவையே.
டெலிபோன் காலை அட்டண்ட் செய்யும் வேலையை கூட ஒடுக்க மறுத்த செய்தி நிறுவனங்களில் முதன்மை ஆங்கர் ஆக காரணம் நான் எடுத்த ரிஸ்குகள், அவமானங்களை, சோதனைகளை தாங்கி நின்ற தன்மை, என்றாவது ஜெயிப்போம் என்ற வெறி, அதற்காக உயிரையும் விட தயாராக இருந்த மனபான்மை..இவைதான்.
இந்த ரிஸ்குகளை நான் எடுக்காமல் இருந்தால் இன்று பள்ளி ஆண்டுவிழாவை கவர் செய்யும் வேலையை தான் செய்துகொன்டிருப்பேன். என்னுடன் ஃபேக்ட் செக்கர் ஆக பணியாற்றிய பலர் இன்னமும் சீனியர் பாக்ட் செக்கர் ஆக அதே கம்பனியில் வேலை செய்கிரார்கள். சிலர் லோக்கல் செய்தி சானலில் செய்தி வாசிக்கிறார்கள்.
-> ஆண்டர்சன் கூப்பர், சி.என்.என் முதன்மை செய்தி ஆன்கர்
நன்றி நியாண்டர் செல்வன்

No comments:

Post a Comment