Saturday 22 June 2019

98 வயது நானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது! யார் இவர்?

98 வயது நானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது! யார் இவர்?
கோவை சேர்ந்த நானம்மாளுக்கு 98 வயதாகிறது. இவர் கடந்த 45 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு யோகா கற்பித்துள்ளார். யோகாசனத்தில் இவருக்கு 90 வருட அனுபவம் உள்ளது. நானம்மாளுக்கு 8 வயது இருக்கும் போது, அவரது தந்தை யோகாசனத்தை கற்பிக்க ஆரம்பித்துள்ளார்.
அன்று தனது யோகா பயணத்தை தொடங்கிய இவர், இன்று வரையிலும் தினந்தோறும் 100 பேருக்கு யோகா கற்பித்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள், 11 பேரன்-பேத்திகள் உள்ளனர்.
இவரிடம் யோகா கற்றுக்கொண்ட 600 பேர் இன்று உலகம் முழுவதும் யோகா ஆசிரியர்களாக உள்ளனர். இதில் 36 பேர் நானம்மாளின் குடும்பத்தினரே ஆவர். இவரது யோகா மாணவர்கள் சீனா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
தற்போது இவர் யோகா குறித்த விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் யோகாவின் மூலம் உடல் ரீதியான பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கின்றார்.
இத்தகைய சிறப்புக்குரிய நானம்மாளுக்கு தான் மத்திய அரசு 2018ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவர் ஏற்கனவே குடியரசுத் தலைவரிடம் பெண் சக்தி விருதை பெற்றவர்.
நன்றி பழனியப்பன் அருணாசலம்

No comments:

Post a Comment