Wednesday 19 June 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மன்னிப்பு என்பது:
நடந்த சம்பவத்தை மறப்பது என்பது அல்ல
எதுவும் நடக்காதது போல பழைய மாதிரி பழகுவது என்பது அல்ல.
அவர் செய்த தவறுக்கான தண்டனை அவருக்கு கிடைக்ககூடாது என்பது அல்ல
அவரை தண்டிக்க சக்தியின்றி எதுவும் செய்ய இயலாமல் ஆயுள் முழுக்க அவரை சபித்துக்கொண்டும், கருவிக்கொண்டும் இருப்பது என்பது அல்ல.
மன்னிப்பு என்பது:
வலிமையின் சின்னம்...வலியவன் தான் ஒருவரை தண்டிக்காமல் மன்னிக்க முடியும்.
"உன்னை தண்டிக்க என்னால் முடியும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. உனக்கு தீங்கு நினைக்கவும் நான் விரும்பவில்லை" என விடுவதே மன்னிப்பு.
ஒருவரை உண்மையில் மன்னிக்க நீங்கள் வலுவானவராக இருக்கவேண்டும்.
அந்த மனவலிமை உங்களுக்கு உள்ளதா என்பதே கேள்வி.
நடந்த சம்பவத்தை மறக்கமுடியவில்லை எனில், அது ஆயுள் முழுக்க நம்மை உறுத்துகிறது எனில், ஒருவரை ஆயுள் முழுக்க நாம் சபிக்கிறோம் எனில் உண்மையில் நாம் தண்டனை கொடுத்துக்கொள்வது நமக்குத்தான்.
அவருக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
"ஆத்திரம் என்பது சூடான நிலக்கரியை அடுத்தவர் மேல் வீசி எறிய நாம் நம் கையால் எடுப்பது போல...அவருக்கு பாதிப்பு ஏற்படுத்த நாம் நம்மை தண்டித்துக்கொள்வதுதான் அதன் பலன்" என்றார் புத்தர்.
மன்னிப்பு என்பது வெறும் தண்டனை தர மறுத்தல் மட்டுமல்ல. முழுக்க நம் மனதில் இருந்து இன்னொருவருக்கு கெடுதல் வரவேண்டும் எனும் நினைப்பையே அகற்றுவதுதான் உண்மையான மன்னிப்பு.
அந்த உணர்வு நம் மனதில் இருந்தால் இன்னொருவனுக்கு கெடுதல் வந்தால் நாம் மகிழ்ச்சி அடையமாட்டோம். வருத்தபடுவோம்.
இதன் மறுபக்கம் என்னவெனில் ஒருவன் நன்றாக இருந்தால் அதை கண்டு நாம் மனதில் வருத்தமடைவதும் ஆகும்.
இரண்டும் அவசியமில்லை.
வாழ்க்கை மிக சிறியது...சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது.
நமக்கு நாமே தண்டனை கொடுத்துகொள்வது அவசியமில்லை....!

No comments:

Post a Comment