Saturday 22 June 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வணங்குதற்குரிய பெரியவர் மணி...
மதுரையின் மகத்துவம்..
மதுரை வில்லாபுரம் பகுதியில் வசிக்கும் 75 வயது சௌராஷ்ட்ரா முதியவர் ஒருவரின் வைராக்கியம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையிலும், அவரின் சிறுவயது ஆசை ஒன்றை நிறைவேற்ற 50 ஆண்டுகள் தொடர் முயச்சி எடுத்து , தனது 75வது வயதில் நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.
சமையல்காரரான பெரியவர் மணி , மழைக்கு கூட பள்ளிகூட பக்கம் ஒதுங்கியது கிடையாது. தன்னால் படிக்க முடியாமல் போன கல்வி, அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்று தன் மனதில் தோன்றிய எண்ணத்தை, தன் இளம் வயதிலிருந்தே வைராக்கியமாக கொண்டு இருந்திருக்கிறார்.
தான் பார்க்கும் சமையல் கூலி வேலையிலிருந்து கிடைக்கும் சிறு வருவாயில் தன் குடும்பச் செலவுகள் போக மீதமுள்ள சிறுத்தொகையை சிறுக சிறுக ஐம்பது வருடங்களாக சேமித்து வந்திருக்கிறார்.
தன்னுடைய ஐம்பது ஆண்டு வாழ்நாள் சேமிப்புத்தொகையான ரூபாய் ஒரு லட்சம், தன்னுடைய சமூகத்தின் பள்ளி மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவித்தொகையாக வழங்க வேண்டும் என்று மதுரை நிலையூர் கைத்தறி நகரில் உள்ள N. K. Kuppien Rathnamani பள்ளி Secretary T. L. Hariharan மற்றும் Treasurer R. S. விஜயராகவன் அவர்களை தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டுள்ளார்.
பெரியவர் மணி அவர்கள் தன் குடும்பத்துடன், N. K. Kuppien Rathnamani பள்ளிக்கு வந்து, தன்னுடைய வாழ்நாள் சேமிப்பான ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையாக பள்ளி தாளாளர் T. L. Hariharan மற்றும் Treasurer R. S. விஜயராகவன் அவர்களிடம் N. K. Kuppien Rathnamani பள்ளிக்கு வழங்கினார்.
தன்னுடைய வாழ்நாள் லட்சியம் மற்றுமின்றி, தன் உழைப்பில், தன் மகன் மற்றும் இரு மகள்கள் திருமணங்களையும் நடத்தி, தன் கடமைகளை அனைத்தும் முடித்து ஒரு சிறந்த தந்தை என்று குடும்பத்திற்கும், பள்ளி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை அளித்து தான் ஒரு சிறந்த குடிமகன் என்றும் நம் அனைவருக்கும் உணர்த்தியுள்ளார்.
அவரின் விடாமுயற்சி மற்றும் சமூகத்தின் மீது கொண்டுள்ள சேவை மனப்பான்மை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
பாராட்டுவோம். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சியம்.
நன்றி சிட்டுக்குருவி



No comments:

Post a Comment