Tuesday 25 June 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இதய அடைப்புகள் நிரந்தரமானவை அல்ல;
நாம் ஆஞ்சியோகிராம் செய்யும் நாளன்று அடைப்புகள் இருந்தாலும் மறுநாளே அவை மாறக் கூடிய தன்மை வாய்ந்தது; தினமும் எலுமிச்சை சாறு சாப்பிடுவது கொழுப்பைக் கரைக்கும் தன்மை உள்ளது; தினமும் மாதுளை சாப்பிடுவதும் மோர் அதிகமாக சாப்பிடுவதும் ஆர்டரிகளின் கடினத் தன்மையை மாற்றும் சக்தி படைத்தது; தினமும் 4 எண்ணிக்கை உள்ள நீரில் இரவே ஊற வைத்த பாதாம் பருப்பு சாப்பிடுவது பி9 வைட்டமின் E ஒமேகா3 உள்ளதால் ரத்தம் கட்டுவதை குறைக்கிறது. ஓட்ஸ் ஆளிவிதை இஞ்சி மஞ்சள் இவைகளை தினமும் சேர்ப்பது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது.வெள்ளை சர்க்கரை வெள்ளை உப்பு குறைப்பது பிபி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். ஆங்கிலேயரை பார்த்து சோப்பு தேய்த்து குளிக்க பழகி, நேரமின்மையால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டுவிட்டோம்; வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்ப்பது வியர்வை துவாரங்களை பெரிதாக்கி கழிவு மண்டலம் வேலையை எளிதாக்குகிறது; இல்லாவிடில் வியர்வை மூலம் வெளியேற வேண்டிய கசடுகள் இரத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்கின்றன. தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி அல்லது எளிய உடற்பயிற்சி அவசியம்.

No comments:

Post a Comment