Thursday 20 June 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இன்றைய சிந்தனை,,( 20.06.2019)..
…………………………………….......
‘’ மற்றவர்களின் ஊக்கமும்,பாராட்டும்..’’..
...........................................
சில நேரங்களில் முகம் தெரியாத யாரோ சொல்லும் ஊக்கம் அளிக்கும் வார்த்தைகளால் கிடைக்கும் அன்பான பாராட்டுக்கள் மிகப் பெரும் பலனைத் தரும்..
எனவே, சாதாரணமானவர்கள் சொல்லும் அன்பான வார்த்தைகளை நாம் உதறித் தள்ள முடியாது..
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜான்.எப்.கென்னடி இளைஞராக இருந்த போது போரில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது வீரமும்,
உழைப்பும் வெகுவாக மற்றவர்களைக் கவர்ந்தது..அந்த சமயத்தில் 90 வயது மிகுந்த ஒரு மூதாட்டி அவர்களிடம் இருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது..
அக்கடிதத்தில்,
’’ கென்னடி,நீங்கள் நம்பிக்கையோடு உடல் நலம் தேறி வர வேண்டும்.. காரணம், நான் எனது வாழ்நாளில் இதுவரை ஒரு ஜனநாயக கட்சிக்கு வாக்கு அளித்தது இல்லை.
நீங்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியும்..
ஆனால் உங்களை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஆக நிறுத்தினால் நான் உங்களுக்கு உறுதியாக வாக்கு அளிப்பேன் என்று எழுதி இருந்தாராம்.
இந்தக் கடிதம் தான் ஜான்.எப்.கென்னடியை மிகவும் ஊக்கமூட்டி,’’ PROFILES IN COURAGE’’ என்ற நூலை எழுத வைத்துப் புகழ் பெறவும் செய்தது..
ஆம்.,நண்பர்களே..,
மற்றவர்களின் ஊக்கம்,பாராட்டு நம் செயல்களையும், உணர்வுகளையும் முடுக்கி விடும்..
சோம்பலை அகற்றி சுறுசுறுப்பைக் கொடுக்கும்..
ஒரு தீப்பொறியாக நமக்குள் உருவாகி செயலின் வேகத்தைக் கூட்டும்..
ஆம்..,தன் மீது முழு நம்பிக்கை இல்லாதவர் கூட, பிறரின் ஊக்கமும்,பாராட்டும் அவரை வெற்றியின் உச்சிக்கே அழைத்து செல்லும்

No comments:

Post a Comment