Friday 28 June 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நிருபர் :
சிவாயநம -ன்னு, சொன்னா அபாயம் இல்லேங்கிறாங்களே...?
சிவாய நம-ன்னு, சொல்லி
ஆயிரம் வோல்ட் மின்சாரத்தை 
தொட்டா அபாயம் இல்லாமல்
போகுமா...?
கண்ணதாசன் :
நம்மோட முன்னோர்கள் எல்லாம், உன்னை விட மடையன்
இல்லே..! அவன் ஒன்னும் "சிவாய நமவென்று, மின்சாரம் தொடுவார்க்கு அபாயமில்லேன்னு சொல்லலை..!
சிவாய நமவென்று "சிந்தித்திருப்பார்க்கு அபாயம் இல்லேன்னுதான் சொன்னான்..!
அவன், சிந்தனையை சொன்னானே தவிர, செயலை
சொல்லலை..! சிந்தனை வேற, செயல் வேற, ஆனால், சிந்தனை ஒழுங்கானால், செயல் ஒழுங்காகும்..! சிந்தனை ஒழுங்கா இருந்தா, நீ ஏன் ஆயிரம்
வோல்ட்டை பிடிச்சி தொங்குறே..? தலையெழுத்தா..?
செயலை ஒழுங்குபடுத்த, சிவாய நம-ன்னு, சிந்தின்னானே தவிர,
சிவாய நமவென்று, கிணற்றில்
குதிப்பார்க்கு, அபாயமில்லேன்னா
சொன்னான்..?
எது நடக்குமோ, அதை மட்டும்தான் சொன்னான்..!
ஏன்னா, இது மாதிரி பின்னாடி ஏதாவது
வரும்னு, அவனுக்கு தெரியும்..!
அதனாலதான், அவன் ரிஸ்கே எடுக்கலை...!

No comments:

Post a Comment