Monday 18 March 2019

*இந்திய பிரதமர்கள் வரலாற்றில் இதுவே முதல்முறை ஆஸ்திரேலியாவின் சிட்னி ஹெரால்ட் பத்திரிகை புகழாரம் !*

*இந்திய பிரதமர்கள் வரலாற்றில் இதுவே முதல்முறை ஆஸ்திரேலியாவின் சிட்னி ஹெரால்ட் பத்திரிகை புகழாரம் !*_
_*சிட்னி :*_
_உலகின் மதிப்புமிக்க மனிதர்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த *"சிட்னி ஹெரால்ட்"* பத்திரிகை வெளியிடும்._
_அரசியல் தலைவர்களின் நடவடிக்கை, ஊழல் குற்றசாட்டு, குடும்ப பின்னணி, அரசியல் செல்வாக்கு, மக்கள் பிரச்சனையை கையாளும் விதம், உலக நாடுகளுடனான நட்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியலை சிட்னி ஹெரால்ட் நிறுவனம் தயாரிக்கிறது._
_அதன்படி இந்த ஆண்டு *"இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் சிறந்த மனிதன்"* என்ற அடையாளத்தை மோடிக்கு சிட்னி ஹெரால்ட் பத்திரிகை வழங்கியுள்ளது, அதற்கென அந்த நிறுவனம் தெரிவித்த கருத்துக்கள் தற்போது இந்தியர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன._
_அதில் உலகில் ஜனநாயகம் வலிமையான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகில் 4-வது மிகப்பெரிய ராணுவ பலத்தினை பெற்றுள்ள இந்தியாவில் ஆச்சர்யமாக ஊடகங்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும் அதிக அளவில் சுதந்திரத்தை அளித்திருக்கிறார்கள். இது இந்தியாவின் வரமாக பார்க்கப்படுகிறது._
_மேலும், இந்திய பிரதமரான மோடியின் வாழ்க்கை செல்வ செழிப்பான குடும்பத்தில் இருந்தோ, இல்லை தந்தையின் அரசியல் செல்வாக்கில் முன்னேறவில்லை. சுயமாக தனது உழைப்பின் மூலம் மக்களின் நம்பிக்கையினை பெற்று தேர்தல்களில் வெற்றி பெற்று வந்திருக்கிறார்._
_உலகின் ஆச்சர்யமான விஷயங்களில் ஒன்று இந்தியாவின் குடும்ப ஆட்சி. ஆனால், இதுவரை 5 முறை முதல்வராகவும், ஐந்து ஆண்டுகள் பிரதமராகவும் பதவி வகித்த மோடியின் ஆட்சியில் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் கூட அரசியலில் இல்லை. அவரது குடும்பத்தினர் அகிம்சை வாழ்வே வாழ்கின்றனர்._
_மேலும், கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை அவர்மீது எந்த ஊழல் கரைகளும் படியவில்லை. மேலும், உலக நாடுகள் மற்றும் ஐ.நா-சபையின் விருதுகள் உட்பட 12 விருதுகளை பெற்றிருக்கிறார். இந்திய பிரதமர்கள் வரலாற்றில் இதுவே முதல்முறை, இதன் அடிப்படையில் மோடிக்கு இந்த ஆண்டின் உலகின் சிறந்த மனிதருக்கான அடையாளத்தை அளிப்பதாக அந்த நாளிதழ் புகழாரம் சூட்டியுள்ளது._
_இந்த விருதினை மோடியின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வருகின்ற 23-ம் தேதி அன்று பெற இருக்கிறார்._
_*இந்திய பிரதமர்கள் வரலாற்றில் வாஜ்பாய் மற்றும் மோடி ஆகிய இரு தலைவர்களின் குடும்பத்தினர் யாருமே அரசியலில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.*_

No comments:

Post a Comment