Thursday 21 March 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒருமுறை கவியரசர் அவர்களிடம் "காத்திருந்தக் கண்கள்" படத்தில் இடம் பெற்ற "வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா?" என்றப் பாடலைப் பற்றி சந்தேகம் கேட்கப்பட்டதாம்! "வளர்த்தக்கலை என்று வராமல் வளர்ந்தக் கலை என்று எழுதியிருக்கிறீர்களே ஏன்?"
இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், "த்" அல்லது "ந்" இரண்டுமே அரை மாத்திரை அளவுதான். அதனால், சந்தத்தில் இரண்டு எழுத்துக்களுமே சமமாகப் பொருந்தும். அதனால் தான் கேட்டவர்களுக்கு சந்தேகம்.
கவியரசர், "கதாநாயகி வளர்ந்த பிறகு கற்றுக் கொண்ட அளவில் அவளின் ஓவியக் கலை இல்லை. அவளுடனே பிறந்த கலை அதாவது பிறவி ஓவியர் அவள், அதனால் "வளர்ந்த" என்ற சொல்லைப் பயன்படுத்தினேன் "என்றாராம். எப்போதோ படித்தேன்.
"ஒற்றை எழுத்தில் கதாபாத்திரத்தின் தன்மையை" அழுத்தமாக எழுதிய கவியரசரின் சிறப்பை என்னவென்று சொல்ல?
படம்:-காத்திருந்தக் கண்கள்.
பாடல்:-கவியரசர் கண்ணதாசன்.
பாடியவர்கள்:-P.B.சீனிவாஸ் & P.சுசீலா அம்மா.
இசை:- அமரர் எம்.எஸ். விஸ்வநாதன் &T.K.இராமமூர்த்தி ஆகியோர், ஆக்கியோர்!!

No comments:

Post a Comment