Wednesday 27 March 2019

கண்ணதாசனின் பெருந்தன்மை.....டி.எம்.எஸ்.

கண்ணதாசனின் பெருந்தன்மை.....டி.எம்.எஸ்.
'வானம்பாடி' படத்தில்...ஒரு பாடல்...
'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்...
அவன் காதலித்தே வேதனையில்
சாக வேண்டும்...'
என்று கவியரசர் கண்ணதாசன் எழுத...'திரை இசைத் திலகம் 'கே.வி.மகாதேவன் இசையமைக்கிறார்.
அந்தப் பாடலை...டி.எம்.எஸ் அவர்களிடம்...கே.வி.மகாதேவனின் உதவியாளர் பாடிக் காட்டுகிறார்.
பாடலைக் கேட்டுப் பார்த்த டி.எம்.எஸ்...
'இந்தப் பாடலின் பல்லவியில் கடவுளை சாக வேண்டும் என்று வரும் வரியை நான் எப்படிப் பாடுவது?
மனிதனுக்குத் தான் மரணம் உண்டு...
கடவுள் சாகா வரம் பெற்றவர்...
எனவே அவரை சாக வேண்டும் என்று வரும் வரிகளை...
கடவுளை சதா புகழ்ந்து பாடிய என் வாயினாலேயே பாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார்.
டி.எம்.எஸ் இப்படிச் சொல்லும் போது...கவியரசர் கண்ணதாசனும் அருகில் இருந்தார்.
'கடவுளை சாடுவதற்காக அப்படி எழுதவில்லை.
கதாபாத்திரம்...காதல் தோல்வியில் அப்படி பாடுவதாக...கதையின் போக்கை அனுசரித்து அப்படி எழுதினேன்.'.என்று..கவிஞர், டி.எம்.எஸ்ஸிடம் சமாதானம் சொன்னார்.
உடனே டி.எம்.எஸ்..கதாநாயகன்...முட்டாள் தனமாக காதலித்து..பின்பு அது..கை கூடாமல் போகும் போது..அந்தக் குற்றத்தை...அறிவார்ந்த பொருளான கடவுள் மீது சாட்டுவதற்கு எந்த நியாயமும் இல்லை.
எனவே...கடவுள்..சாக வேண்டும் என்ற வரியை மட்டும் நான் பாட மாட்டேன்...என்றார் மீண்டும் பிடிவாதமாக.
கண்ணதாசன் மட்டுமல்ல..கே.வி.மகா தேவனும்...எவ்வளவோ சமாதானம் செய்தும்...டி.எம்.எஸ் தனது முடிவில் தீர்மானமாக இருந்தார்.
உடனே கண்ணதாசன்...'அவ்வளவு தானே முருக பக்தரே...சாக வேண்டும் என்ற வரியை...'வாட வேண்டும் என்று மாற்றி எழுதித் தருகிறேன்...' என்று சொல்லி...அதை வாங்கி திருத்தம் செய்து கொடுத்தார்.
கவியரசராக அவர் இருந்த போதிலும்...சக கலைஞனின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற உணர்வுடன் கண்ணதாசன் அன்று பெருந்தன்மையாக நடந்து கொண்ட விதம்...
இன்றும் என்னை வியக்க வைக்கிறது...வணங்க வைக்கிறது என்கிறார் டி.எம்.எஸ்.
இணையதளத்தில் படித்தது.

No comments:

Post a Comment