Thursday 28 March 2019

விண்ணை முட்டியது விஞ்ஞான வளர்ச்சி....

விண்ணை முட்டியது விஞ்ஞான வளர்ச்சி....
மண்ணில் பலமிக்க ராணுவம்,
வான்வழியில் வலிமைமிக்க விமானப் படை, கடல் பகுதியில் சக்தி மிக்க அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் படையினர்....
இன்று விண்வெளியில் சர்வ வல்லமை படைத்த சூப்பர் பவர் தேசமாக இந்தியா உருவாகி உள்ளது...
அனைவருக்கும் ஒரு தேசத்தின் பாதுகாப்பு முப்படைகளும் தான் என்று தெரியும்..
ஆனால் அதையும் தாண்டி விண்வெளி ஏவுகணை பாதுகாப்பு படை என்று
மூன்று நாடுகளில் மட்டுமே உள்ளது என்று தெரிய வாய்ப்பில்லை...
இன்று நான்காவது அதி சக்தி வாய்ந்த விண்வெளி படையாக ASAT செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை படையை இந்தியா உருவாக்கி சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளது...
Mission Sakthi என்ற திட்டத்தில்
விண்வெளியில் (LEO) லோ எர்த் ஆர்பிட் ல் 300 கிமீ உயரத்தில் சுற்றி வரும் செயற்கைகோளை 3 நிமிடத்தில்
ASAT என்ற Anti Statellite Missile -
செயற்கைகோளுக்கு எதிரான ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப்பட்டது.
இந்த ஏசாட் சாதனை என்பது பொகரான் 1 மற்றும் 2 சாதனைகளை விட மிகவும் பெரியது... பாகிஸ்தான் உள்ளே சென்று பாலாகோட் முகாம்கள் மீது நடத்திய வான்வழி தாக்குதலை விட மிகவும் சக்தி வாய்ந்தது...
விண்வெளி போர், மின்னணு யுத்தம்...
எதிர் காலத்தில் ஒரு தேசத்தை தோல்வி அடையச் செய்ய ராணுவம், விமானப் படை, கப்பல் படை மூலம் தாக்குதல் நடத்த தேவையில்லை...
விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைகோள்களை தாக்கி அழித்தால் போதுமானது. அந்த நாடே ஸ்தம்பித்துப் போகும்...
இன்டர்நெட், தகவல் தொடர்பு, செல்போன், ரயில், விமானம், கப்பல் போக்குவரத்து நின்று போகும்...
மேலும் ராணுவ கண்காணிப்பு, அறிவியல் ஆராய்ச்சிகள், வங்கி நடவடிக்கைகள் எல்லாம் ஸ்தம்பித்துப் போய்விடும்...
செயற்கைகோளை வீழ்த்தினால் ஒரு தேசத்தை வீழ்த்தி தோல்வியடையச் செய்ய முடியும்...
இந்த வலிமை அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளிடம் மட்டுமே உள்ளது.
இன்று 4 வது நாடாக விண்வெளி சூப்பர் பவர் நாடாக உருவாகி விட்டது...
தேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டுமா?, எதிரி நாடுகளின் ரகசிய கண்காணிப்பை முறியடிக்கும் வலிமைமிக்க நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்றால், அணு ஆயுதங்களை விட சக்தி தேவைப்படுகிறது என்பதை உணர வேண்டும்...
BMD - Ballistic Missile Defence அமைப்பு உருவாக்கி விட்டது இந்தியா...
இதன் மூலம் இந்தியாவை அத்துமீறி கண்காணிக்கும் எதிரி நாட்டின் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் சக்தி கிடைத்துள்ளது...
எதிரி நாட்டிலிருந்து வான்வழியில் அத்துமீறி நுழையும் ராணுவ விமானங்களையும், இந்தியா மீது தாக்குதல் நடத்த அனுப்பும் ஏவுகணைகளை விண்வெளியில் அழிக்கும் சக்தியை இந்திய தேசம் பெற்று விட்டது என்பதை பிரதமர் மோடியை தவிர வேறு யாரும் அறிவிக்க முடியாது என்பதை உணர வேண்டும்...
இது குறித்து ஓய்வு பெற்ற DRDO முன்னாள் தலைவர் V.K.சரஸ்வாத் கூறுகையில், UPA காங்கிரஸ் அரசு இந்த செயற்கைகோளுக்கு எதிராக ஏவுகணை ஆய்வு செய்ய அனுமதி தரவில்லை என்று தெரிவித்தார்...
அப்போது இது வெறும் கதை, காகிதப் புலிகள் என்று பிற நாடுகள் இந்தியாவை விமர்சனம் செய்தது....
2012 மற்றும் 2013 ம் ஆண்டுகளில் UPA காங்கிரஸ் ஆட்சியில் பலமுறை அனுமதி கேட்டும் தர மறுத்து விட்டது என்று கூறியுள்ளார்...
ISRO முன்னாள் தலைவர் மாதவன் நாயர் பேசுகையில், அரசியல் ரீதியாக முடிவு எடுக்கும் துணிவு முந்தைய UPA காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்று தெரிவித்துள்ளார்...
இது குறித்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் கேட்டதற்கு இப்படி ஒரு திட்டமே இல்லை என்றும் இதைப் பற்றி தனக்கு தெரிகிறது என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
2014 ல் பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு தான் DRDO க்கு அனுமதி கிடைத்தது என்று தெளிவுபடுத்தி உள்ளார்கள்...
தற்போதைய DRDO தலைவர் சதீஷ் ஷெட்டி பேசுகையில்,
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி இந்த ஆய்வுக்கு அனுமதி அளித்தார்...
கடந்த ஆறு மாதங்களாக 100 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஆய்வு செய்து இன்று விண்வெளியில் வெற்றிகரமாக சோதனை நடத்தி உள்ளனர் என்று தெரிவித்தார்...
எனவே BMD என்ற விண்வெளி ஏவுகணை தாக்குதலில் இருந்து தேசத்தை பாதுகாக்கும் சக்தியை உருவாக்க அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்...
இந்த பணியை வெற்றிகரமாக நடத்தி காட்டிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள்...
இந்திய தேசம் சர்வ வல்லமை படைத்த சூப்பர் பவர் என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவிப்பு செய்தார். அதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் கலந்துரையாடல் நடத்தினார், வியத்தகு சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கு தேசத்தின் சார்பாக பாராட்டுக்களை பிரதமர் மோடி தெரிவித்தார்...

No comments:

Post a Comment