Tuesday 26 March 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சுயேட்சை வேட்பாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய கார்த்தி சிதம்பரம்
Published : Mar 25, 2019 6:40 PM
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், நல்ல நேரம் முடியப் போவதாகக் கூறி ஏற்கனவே அங்கு வேட்பு மனுத் தாக்கலில் ஈடுபட்டிருந்த சுயேட்சை வேட்பாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த கார்த்தி சிதம்பரம், தேர்தல் விதிகளை மீறி 10 க்கும் மேற்பட்டவர்களோடு, ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்றார். 5 பேருக்கு மேல் செல்லக்கூடாது என போலீசார் தடுத்தும் அவரது ஆதரவாளர்கள் கேட்கவில்லை.
கார்த்தி சிதம்பரம் உள்ளே சென்றபோது அங்கு ஏற்கனவே ராஜேந்திரன் என்ற சுயேட்சை வேட்பாளர் மனுத் தாக்கல் செய்து கொண்டிருந்தார்.
ஆனால் ஒன்றரை மணிக்குள் நல்ல நேரம் முடிந்து விடும் எனக் கூறி, ராஜேந்திரனை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய கார்த்தி சிதம்பரம் தனது மனுவை ஆட்சியரிடம் வழங்கினார்.
வேட்பாளர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தும் தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது எந்த வகையில் நியாயம் என சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் விதிமுறைகளை மீறிய கார்த்தி சிதம்பரத்தின் மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்த மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

No comments:

Post a Comment