Saturday 30 March 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பொதுநல அடிப்படையில் வாழ்ந்துதான் புத்தர் புகழ் பெற்றார்.
அவர்
இறைவனைப்பற்றிப் பேசவில்லையாயினும்
இறைவனைப் பணிவோர் கொள்ளும் அன்பு வாழ்க்கையையும்,
தியாகவாழ்வையுமே நடத்தினார்.
அதனால்
அவரே இறைவனின் இடத்தில் வைக்கப்பட்டுத் தொழப்பட்டார்.
சுவாமி விவேகானந்தரும்
இறை வாழ்க்கையில் ஈடுபட்டே பெரும் புகழுற்று உயர்ந்தார்.
தன்னம்பிக்கையைவிட, இறைநம்பிக்கையின் வீச்சு அதிகம்.
அதனாலேயே
தன் நம்பிக்கை கொண்டு முன்னுக்கு வந்தோரைவிட,
இறைவனை நம்பி மேலுக்கு வந்தோர் அதிகம்.
ஏனெனில் ,
இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கும் வேலைகள் யாவும் இறைவனுடையது.
அவனே செய்பவன்.
அவன் அளித்த சக்தியை வைத்தே அனைவரும் இயங்குகின்றனர்.
இந்தப் பிரபஞ்சம் எப்படிப் போனாலும் அதன் பயன் இறைவனைச் சார்ந்ததே.
ஏனெனில் அவனே பொறுப்பாளி.
ஆகவே ,
அவரவருக்கு அளிக்கப்பட்டுள்ள சக்தி, அந்தஸ்து எல்லாம் அவன் வேலையைக் கவனிக்கவே.
இதில்,
அவன் சித்தத்திற்கு மாறாக
"நான் செய்கிறேன் "
"எனக்காகச் செய்கிறேன் " என்பது அகங்காரமாகிறது.
அப்போதே இருவினைகளையும் ஏற்று அவற்றின் பயன்களை அனுபவித்து சம்சாரத்தில் விழ வேண்டியதாகின்றது.
"ஆட்டி வைப்பவன் இறைவன் "
என்னும் போது,
உங்களை நம்புவதைவிட இறைவனை நம்புவதே உத்தமம்.
ஈசனைநினை! தீரும் தீவினை!
வாழிய பல்லாண்டு வாழியவே

No comments:

Post a Comment