Wednesday 18 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏵 அடுத்தவரைப் பார்த்து பொறாமைப் படுவதை விட்டுட்டு, அவரின் திறமையைப் பார்த்து உன் திறமையை வளர்த்துக் கொள்ள ஆசைப் படு, நீயும் அந்த இடத்திற்கு வருவதற்கான வழி பிறக்கும்.
🏵 நமக்கு எதிரான சில சந்தர்ப்பங்களில், நம்மைப் புரிந்தவர்கள் மட்டுமே நம்மிடம் விளக்கம் எதையும் எதிர் பார்ப்பதில்லை.
🏵 நம் மீது அக்கறை உள்ளவர்கள் என்றாலும், அவர்கள் நம்மைப் பற்றி கூறும் விமர்சனங்கள் மனதிற்குப் பிடிப்பதில்லை.
🏵 கேள்விக்கு ஏற்ற விடையை யாரும் தேடுவதில்லை. தனக்கேற்ற விடையையே எதிர் பார்க்கிறார்கள்.
🏵 நம்மை மற்றவர்கள் சந்தேகிக்க இடம் அளிக்காமல், வாழ்ந்து காட்டுவது வாழ் நாள் சாதனை.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment