Wednesday 25 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

⛋நமது பிரச்சனைகளை பிறர் உதவியுடன் தீர்த்துக்கலாம் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால், பிரச்சனைகள் அதிகரிக்குமே தவிர அது கொஞ்சம் கூட குறையாது.
⛋தன் மகள், மகன் கேட்கும் எந்தப் பொருளும் வீண் செலவாய்த் தெரிவதில்லை பெற்றோருக்கு.
⛋மெட்சூரிட்டி என்பது புரிஞ்சுக்குறதோ புரிய வைக்கிறதோ இல்ல. சூழ்நிலையைப் பொருத்து நடந்து கொள்வது.
⛋காயப்படுத்துகிற மாதிரி எல்லாருக்குமே பேசத் தெரியும். சிலருக்கு மட்டும் தான் எதைப் பேசக் கூடாதுனு தெரிஞ்சிருக்கு.
⛋வாழ்க்கையில நல்லது கெட்டத புத்தகத்தை விட தெளிவா புரிய வைக்கறது நாம் பழகும் சக மனிதர்கள் தான். எனவே 'ஆகச் சிறந்த புத்தகம் மனிதன்'
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment