Friday 27 April 2018

அன்னை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மாப்பிள்ளை வி௫ந்தில் 40000 நாற்பதாயிரம் பேருக்கு இன்று இரவு விருந்து இது மதுரையின் சிறந்த பணி. - மனிதத்தேனீ

அன்னை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மாப்பிள்ளை வி௫ந்தில் 40000 நாற்பதாயிரம் பேருக்கு இன்று இரவு விருந்து சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பழமுதிா்ச் சோலை தி௫வ௫ள் மு௫கன் பக்த சபை டிரஸ்ட் தலைவர் சாமுண்டி விவேகானந்தன் குழுவினர் ஏற்பாடு. மிக நேர்த்தியாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மகராஜ், மதுரைக் கல்லூரி வாரியத் தலைவர் என். எஸ். கிருஷ்ணன், பள்ளிச் செயலர் எஸ். பார்த்தசாரதி, மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் தொடங்கி வைத்தனர். எஸ். ஆர். எஸ். பிரதர்ஸ் சங்கரன், முன்னாள் செயலாளர் எம் எஸ் மீனாட்சி சுந்தரம், இல. அமுதன், சிவானந்த சீனிவாசன், தியாக தீபம் அ. பாலு, காவல் துறை ஏ சி மணிவண்ணன், கணேசன், ஏ. வி. பிரபாகரன், ஆடிட்டர் ஆதி சேசன்,சபை தலைவர் வி கே பாஸ்கர், வழக்கறிஞர் கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் வழங்கினர். நாளை காலை முதல் மாலை வரை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு வழங்கிட மதுரையில் உள்ள பெண்கள் மற்றும் பக்தர்கள் காய்கறிகளை தயார் செய்து உணவு வழங்க பணியாற்றி வருகிறார்கள். இது மாநகா் மதுரையின் சிறந்த பணி. - மனிதத்தேனீ



















No comments:

Post a Comment