Monday 23 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இன்று புத்தக தினமாம்...மகிழ்ச்சி...!
.
சரி....ஒரு லட்சம் புத்தகங்களை , பொக்கிஷம் போல போற்றிப் பாதுகாத்து வந்த ஒரு தனி மனிதரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ..?
அந்த அபூர்வ மனிதரின் பெயர் ரோஜா முத்தையா செட்டியார்..!
.
சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் பிறந்து வாழ்ந்தவர் இந்த ரோஜா முத்தையா செட்டியார்..
[ 1926-1992 ]
.
தன்னுடைய நடுத்தர வயதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் புத்தகங்களை சேர்த்து விட்டாராம் செட்டியார்..!
.
சரி...தனி ஒரு மனிதனாக , எப்படி இவற்றையெல்லாம் பாதுகாப்பது ...?
.
ஒன்று செய்யலாம்.....இந்த புத்தகங்கள் அனைத்தையும் தஞ்சை பல்கலைக்கழகத்திற்கு கொடுத்து விடலாம்...அல்லது தமிழக அரசிடம் கொடுத்து விடலாம்
என்று திட்டமிட்டார் செட்டியார் !
அதற்கான முயற்சிகளை முழு மூச்சுடன் எடுத்தார்..!
.
அடுத்த சில நாட்களில் , அதிகாரிகள் சிலர் வீடு தேடி வர....
செட்டியாருக்கு அளவில்லா சந்தோஷம்..!
.
அப்பாடா...அரசு அதிகாரிகள் வந்து விட்டார்களே என ஆவலோடு வரவேற்றார் ...!
.
ஆனால் வந்தவர்கள்....
அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்கள்..!
.
செட்டியார் பற்றி கேள்விப்பட்டு , தானாகவே முன் வந்த சிகாகோ பல்கலைகழகத்தினர் ,கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்து செட்டியாரிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் அவர்களே எடுத்துக் கொள்ள தயாராக இருந்தார்கள் ...!
.
ஊஹூம்... முத்தையா செட்டியார் தமிழனாயிற்றே ...!
“என் பொக்கிஷங்கள் இந்த தமிழ் நாட்டிற்கு மட்டுமே சொந்தம்..ஆளை விடுங்கள் ” என்று சொல்லி விட்டார்.
.
என்றாவது ஒரு நாள் , தன் புத்தக பொக்கிஷங்களை தமிழக அரசு எடுத்துக் கொள்ளும் என்று தளராத நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருந்தாராம் முத்தையா செட்டியார் ....
.
செட்டியார் , ஒரு புத்தகத்தை கையில் எடுக்கும்போது , அப்போதுதான் பிறந்த குழந்தையை எடுப்பதை விட , மென்மையாக எடுப்பாராம்... எந்த புத்தகத்தை யார் அவரிடம் கொடுத்தாலும் கோடி ரூபாய் பணத்தை கையில் வாங்குவது போல மகிழ்வோடு வாங்குவாராம்..
.
எல்லோரும் தாங்கள் உடுத்தியுள்ள வேட்டி அழுக்காகாமல்தான் பார்த்துக் கொள்வார்கள். ஆனால்....செட்டியார் தன் புத்தகத்தில் அழுக்கு இருந்தால்,
தான் உடுத்தியிருக்கும் பட்டு வேட்டியால் , புத்தகத்தில் இருக்கும் அழுக்கை மென்மையாகத் துடைப்பாராம்...!
.
தான் வாழும் காலத்திலேயே , எல்லா புத்தகங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைத்து விட ஆசைப்பட்ட முத்தையா செட்டியார்... எதிர்பாராமல் 4.6.1992 அன்று இறந்து போனார்.
.
அதன்பின் சிக்காகோ பல்கலைக்கழகம் மீண்டும் செட்டியாரின் குடும்பத்தை தொடர்பு கொண்டது...செட்டியாருடைய சேகரிப்புக்கள் அனைத்தையும் , நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டது...
அந்த நூல்கள் அனைத்தையும் அமெரிக்கா கொண்டு செல்லாமல் , செட்டியார் ஆசைப்பட்டபடியே , சென்னையிலேயே ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்’ என்ற பெயரில் 1994-ம் ஆண்டு தொடங்கி , இப்போதும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்களாம் ...!
சென்னை தரமணியில் இருப்பதாக தகவல்...!
.
ஒரு ஆச்சரியம்....தமிழனை தமிழனே மதிப்பதில்லை... !
.
ஆனால் வெளி நாட்டுக்காரர்கள் இன்னமும் நம்மை , நம் தமிழை மதிக்கிறார்கள்..!
.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் ,
சொந்த நாட்டுக்காரனை ஏனோ , சோகத்திலேயே வைத்திருக்கிறது..!
அரசு அதிகாரிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் :
புத்தகங்களை படியுங்கள்.!.
அதோடு....தமிழ் மொழியையும், தமிழ் ஆர்வம் உடையவர்களையும் கொஞ்சம் மதியுங்கள்...!!
மிதிக்காதீர்கள்...!
.
இன்று புத்தக தினம்...!

No comments:

Post a Comment