Monday 23 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உலகவரலாற்றில் மாற்றம் ஏற்படுத்திய புத்தகங்கள்
*இரு பெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய உரையாடல் -கலிலீயோ*
கலிலியோ கலியை *நவீன இயற்பியலின் தந்தை* (Father of Modern Physics) என்று புகழ் மாலை சூட்டுகிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.
இந்த புகழ் மாலைக்குத் தகுதியான கலிலியோ 1632 ஆம் ஆண்டு 'இரு பெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய உரையாடல்' (Dialogue of the Two Principal Systems of the world) என்னும் நூலை எழுதி முடித்து வெளியிட்டார்.
இந்நூலைப் படித்த ரோம் மதவாதிகளுக்குக் கோபம் வந்துவிட்டது. இந்நூலைத் தீயிட்டுக் கொளுத்தும்படி உத்தரவிட்டதுடன் இந்த நூலுக்கு தடையும் விதித்தனர்.
அதுமட்டுமின்றி இந்த நூலை எழுதியமைக்காய் கலிலீயோ வுக்கு மரணதண்டனை அளித்ததுடன்
கலிலியோவுக்குத் தண்டனையளித்த செய்தியினை எல்லா பல்கலைக்கழகங்களிலும் வாசிக்கப்பட வேண்டும் என்றும் கட்டளையிட்டனர்.
அந்த அளவு அவர்களுக்கு கோபம் வரும்வகையில் கலிலீயோ என்னதான் எழுதி இருக்கிறார் அந்த நூலில் தெரியுமா...?!!
இந்நூலில் போலந்து விஞ்ஞானி கோப்பர்நிகசின் சூரிய மைய கொள்கையை பல ஆதாரங்களுடன் நிரூபித்து உயர்வாக எழுதியுள்ளார் கலிலியோ.
கலிலியோ தம் கைப்பட அமைத்த தொலைநோக்கி மூலம் அண்ட கோள்களின் நகர்சிகளைக் கண்டதையும் சோதித்தையும் எடுத்துக் காட்டி கோப்பர்நிகசின் சூரிய மைய கொள்கையே மெய்யானதாக விளக்கியுள்ளார்.
பால்வளி தொகுப்பின் மையம் சூரியன் என உண்மையை உரத்து கூறியமைக்குதான் கலிலீயோவுக்கு மரணதண்டனை.
தொலைநோக்கி மூலம் முதலில் நிலவில் மலைகளையும் குழிகளையும் கண்டார். பால் மய வீதியில் (Milky way) கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதையும் கண்டார். வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய சந்திரன்களைக் கண்டார். ஒளிவீசும் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு வெள்ளியும் சூரியனைச் சுற்றி வருகிறது என முதன்முதலில் சோதனை மூலம் காட்டி தாலமியின் 'பூமிமைய கொள்கை' பிழையானது என்றும் கூறியுள்ளார்.
கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளைத் தான் மட்டுமே முதன்முதலில் கண்டதற்காக ஆனந்தப்படுகின்றார் கலிலியோ.
ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப்படுபவர் கலிலியோ.
இந்நூல் விண்வெளி ஆராய்ச்சிக்கு வழிகாட்டும் முதல் நூலாகும். விண்வெளி ஆர்வலர்களும் பிறரும் கட்டாயம் படித்து அறிந்து கொள்ள வேண்டிய நூலாகும்.
ஏழுகடல் ,ஏழுமலை தாண்டி மட்டுமல்ல...
அண்டங்கள் தாண்டியும்
அறிவை வளர்க்க
புத்தகங்களை துணைக்கொள்வோம்
*ஏப்ரல்-23 உலக புத்தக தினம்*
வாசிப்பை நேசிப்போம்

No comments:

Post a Comment