Friday 20 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

திருப்பணி திலகம்....
பாழடைந்த மற்றும் சிதிலமான பழமையான கோவில்களை பார்க்கும்போதெல்லாம் பண்டைய மன்னர்கள் கட்டிய கோவில்கள்போல நம்மாலோ அல்லது நமது அரசாலோ தற்போது கட்டமுடியாவிட்டாலும் கூட பரவாயில்லை அவற்றை சரிவர பராமரிக்ககூட முடியவில்லையே என்று எண்ணம் தோன்றும். கிராமப்புறங்களில் பழமையான வரலாறு கொண்ட மற்றும் சிறப்புமிக்க தொன்மையான பல கோவில்கள் அழியும் நிலையில் உள்ளன. அவற்றையெல்லாம் கண்டறிந்து புதுப்பித்து கும்பாபிசேகம் செய்யும் பணியை ஒருவர் எந்த விளம்பரமுமின்றி செய்து வருகிறார். திருமதி. மகாலட்சுமி சுப்பிரமணியன் அவர்கள்தான் அது. அவர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இதுவரை 137 சிதிலமடைந்த புரதான ஆலயங்களை தமது பெருமுயற்சியால் சீரமைத்து கும்பாபிஷேகம் செய்துள்ளார். மேலும் பல்வேறு ஆலயங்களில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
கும்பாபிஷேகம் செய்வதோடு நிறுத்திவிடாமல் தினசரி ஒருவேளை பூஜைகூட நடைபெறாமல் உள்ள ஆலயங்களை கண்டறிந்து அவற்றிற்கு அர்ச்சகர்கள் நியமிப்பது அவர்களுக்கு மாத சம்பளம் பெற வழிவகை செய்வது போன்ற பணிகளையும் செய்துவருகிறார்.
மேலும் மகாலட்சுமி சாரிட்டபுள் ட்ரஸ்ட் மூலம் பல்வேறு சமூக நல பணிகளையும் செய்து வருகிறார்.
குருசேகர ரத்தினம், திருப்பணி செம்மல், திருப்பணி திலகம் போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. அத்தகைய கோவில்களை பாதுகாக்கும் இவரை நாமும் போற்றுவோம்.
நன்றி ராஜப்பா தஞ்சை


No comments:

Post a Comment