Wednesday 20 July 2022

உழைப்பில் தான் சுவையுள்ளது.

 உழைப்பில் தான் சுவையுள்ளது.

முயன்றால் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை. விடா முயற்சி வெற்றிக்கு வித்திடும் வழிகள் ஆகும். வாழ்வில் சுவையை கூட்டுவதும் இந்த முயற்சிகள்தான்.
தளர்ச்சியில்லா முயற்சியே ஒரு பயிற்சி தான். தோல்வியை வெல்ல முயற்சி என்னும் ஆயுதம் ஏந்த வேண்டும். நம் செயலில் முயற்சியிருந்தால் தோல்விகள் நம்மை அண்டாது. எறும்பின் உழைப்பில் முயற்சி இருக்கிறது.
*‘தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்’* என்பது வள்ளுவர் வாக்கு.
நம் திட்டமிட்ட முயற்சி நாம் வேண்டியவற்றையும், வேண்டியதற்கு மேலும் அள்ளித் தரும். முயற்சிக்கு உதாரண புருஷர்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளார்கள். அவரவர் செயலில் முயன்று வென்றதால் தான் அவர்கள் சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள்.
முயற்சியில் வெற்றி கிடைக்க மூன்று விஷயங்களில் நாம் சரியாக இருக்க வேண்டும்.
1. நம்முடைய நோக்கம் நல்லதாக இருக்க வேண்டும்.
2. நம் முயற்சி தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.
3. எல்லோரும் முயலும் பொதுவான வழியாக நம் வழியும் இல்லாமல், சற்று அறிவு நலனும் கெட்டிக்காரத்தனமும் கொண்டதாக நம் வழி இருக்க வேண்டும்.
‘இது என்னால் முடியாது; அதற்கான சாமர்த்தியம் எனக்குப் போதாது’ என்று எண்ணாதீர்கள்; சொல்லாதீர்கள்.
உங்களுக்கு எவ்வளவு குறைவான சாமர்த்தியம் இருந்த போதிலும், அந்த அளவிற்கான சாமர்த்தியத்திற்கு உரிய வெற்றியை அடையவாவது உங்களுக்குத் தகுதி இருக்கிறது என்பது உண்மையல்லவா.

No comments:

Post a Comment