Monday 4 July 2022

மைன்ட் செட் எனும் மகத்துவம்.

 மைன்ட் செட் எனும் மகத்துவம்.

வாழ்க்கையில் ஏதாவது ஒன்று மாற வேண்டும் என்றால் அது முதலில் உங்கள் எண்ணத்தில் மாற வேண்டும்.
ஒரு பணக்காரனுக்கும் பணமில்லாதவனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஒன்று தான். மைன்ட் செட், இந்த மைன்ட் செட் மாறாமல் இங்கு எதுவும் மாறப் போவதில்லை.
வீதியில் ஒரு BMW கார் பார்க்கிறீர்கள்.
இப்போது உங்கள்
மனம் என்ன சொல்லும். இதற்கு நான் தகுதியானவன் கிடையாது.
அந்தக் கணமே உங்களது கார் பற்றிய எண்ணம் உங்கள் மேல் மனதோடு இல்லாமல் போய் விடுகிறது.
இதே ஈர்ப்பு விதி அறிந்த ஒருவன் அதே BMW காரைப் பார்க்கின்றான், அப்போது அவன் எண்ணம் இந்தக் காரை எப்படி வாங்கப் போகிறேன் எனச் சிந்திக்க ஆரம்பிக்கும், இப்போது அவன் எண்ணத்தோடு அழகிய எதிர்பார்ப்பு மற்றும் மகிழ்ச்சியான உணர்வு சேர்ந்து மேல் மனதில் இருந்து ஆழ் மனதிற்கு அந்த எண்ணத்தைக் கடத்தும். ஈர்ப்பு விதியின் அடிப்படையே உங்கள் ஆழ் மனதின் எண்ணங்களையே உங்கள் வாழ்வில் ஈர்க்கிறீர்கள். இதையே ஐன்ஸ்டீன் கற்பனையே உங்கள் வாழ்வின் முன்னோட்டம் என்கிறார்.
இங்கு கவனிக்க வேண்டியது, உங்கள் எண்ணம் உணர்வுகளோடு சேரும் போது அது ஒரு சக்தியை உருவாக்குகின்றது.
அந்த சக்தி உங்கள் வாழ்க்கையில் ஆக்கவும் அல்லது அழிக்கவும் பயன்படுகிறது. எதற்கு நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.

No comments:

Post a Comment