Wednesday 6 July 2022

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் நகரச் சிவன் கோவிலில் ஆனித் திருவிழாவில் நேற்று இரவு தேர்த் திருவிழாவை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் கோவில் முன்புறம் உள்ள திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.
















 சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் நகரச் சிவன் கோவிலில் ஆனித் திருவிழாவில் நேற்று இரவு தேர்த் திருவிழாவை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் கோவில் முன்புறம் உள்ள திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.

பள்ளத்தூர் நகரத்தார் இளைஞர் வளர்ச்சிக் குழுவினர் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் சிடி. வடிவேலு தலைமை தாங்கினார்.
நடப்புக் காரியஸ்த்தர்
கே டி எஸ். பழனியப்பன் முன்னிலை வகித்தார்.
சொற்பொழிவாளர்களுக்கு பெரியவர் சாத்தப்பச் செட்டியார், அபுதாபி ஏஎல் அழகப்பன் என்ற கண்ணன், எஸ். சம்பந்தன் என்ற ராமசாமி, எஸ் சபாரத்தினம் சிறப்புச் செய்தனர்.
102 வயதான பெரியவர் பழையூர் கருத்த சேர்வை பழனியப்பன் அவர்களுக்கு நடுவர் மனிதத்தேனீ கைத்தறி ஆடை அணிவித்து சிறப்புச் செய்தார்.
பாசம் காட்டுவதில் சிறந்தவர் மாமியாரே-மருமகளே
என்ற தலைப்பில் மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் நடுவராகப் பங்கேற்றும்
மாமியாரே என்ற அணியில்
எஸ். ஞானசம்பந்தன், முனைவர் மனோன்மணி
மருமகளே என்ற அணியில் புதுகை பாரதி, எஸ். திருநாவுக்கரசு
பேசினர்.
மாமியார் மருமகள் உறவு மேம்படவும்
மாமியார் மற்றொரு தாய் என்பதையும்
மருமகள் மற்றொரு மகள் என்பதையும் மூன்று மணி நேரம் நடைபெற்ற பட்டிமன்றத்தில்
சிறப்பாக நினைவூட்டினர்.
நிறைந்த பட்டறிவும் குடும்ப நல மேன்மைக்கு துணை புரியும் பக்குவம் பெற்றவர் மாமியாரே எனத் தீர்ப்பளித்தார்.
மருமகளும் அடுத்த இருபத்து ஐந்து ஆண்டுகளில் மாமியாரே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
பெருந்திரளான அளவில் நகரத்தார்கள் மற்றும் நாட்டார்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை நகரத்தார் இளைஞர் வளர்ச்சிக் குழு நிர்வாகிகள் செயலாளர் செல்வம், பொருளாளர் பாலா, துணைத் தலைவர் எஸ்பி. அண்ணாமலை, இணைச் செயலாளர்கள் பழனியப்பன், சாத்தப்பன், அண்ணாமலை
இணைப் பொருளாளர்கள் கணேஷ், சிவகணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment